|
தமிழ்நாட்டில் மஹிந்தவின் கொடும்பாவி எரிப்பு |
|
|
|
Wednesday, 15 October 2008 |
|
தமிழ் நாட்டில் ஜனாதிபதி மஹிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இன அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோயம்புத்தூரில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அப்பாவிப் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து தமிழக மக்களுக்கும் மத்திய அரசிற்கு அழுத்தங் கொடுக்க வேண்டும் என இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து இராணுவ தளபாடங்களுக்கும் மீளப்பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும், யுத்த பயிற்சிகள் வழங்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக இலங்கையின் முன்னணி சிங்கள இணையத்தளமொன்று தனது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது.
நெருடல் இணையம்
|