பதினொரு வருடங்கள் அமைதிக்காக போர் செய்து வீடு திரும்பும் சமாதானப் புறா எவ்வளவு தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும்(இராணுவத்
தினை)அழித்துச் சென்றுள்ளது இவையெல்லாம் எதற்காக ....................லண்டனில் 10 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான மாளிகையா?: சந்திரிகா மறுப்பு
Saturday, 03 December 2005
--------------------------------------------------------------------------------
சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க லண்டனில் இளவரசர் ஆன்ட்ரூவின் மாளிகையை 10 மில்லியன் பவுண்டுகள் விலைக்கு வாங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் இந்தச் செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்று சந்திரிகா குமாரதுங்க மறுத்துளார்.
இங்கிலாந்திலிருந்த-7505; வெளியாகும் ஈவினிங் ஸ்டாண்டர்ட் என்ற இதழின் டிசம்பர் முதலாம் நாளிட்ட பதிப்பில் இது தொடர்பிலான செய்தி வெளியானது.
இளவரசர் அன்ட்ரூசின் சௌத்யோர்க் பகுதியில் உள்ள சன்னின்ஹில் பார்க் மாளிகையை இங்கிலாந்து அரசியாரின் 2 ஆவது மகனான இளவரசர் அன்ட்ரூவிடமிருந்து சந்திரிகா குமாரதுங்க வாங்கியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிரு-7506;¨்தது.
மேலும் பாரிசில் சந்திரிகா 2 அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிறிஸ்டல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவராக தெரிவாகி இருக்கும் தன் மகனுக்காக லண்டனுக்கு அருகில் ஒரு வீட்டை வாங்கியிருப்பதாகவு-7506;®் சந்திரிகாவின் மகள் இங்கிலாந்தில் மருத்துவராக இருப்பதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிரு-7506;¨்தது.
ஆனால் இச்செய்தியை சந்திரிகாவின் அலுவலகம் மறுத்துள்ளது. சந்திரிகாவுக்குச் சொந்தமாக வெளிநாட்டில் எந்தச் சொத்தும் இல்லை என்றும் இந்தச் செய்தியை வெளிட்ட நாளிதழ் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சந்திரிகா அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்-7506;³து.
இருப்பினும் சந்திரிகாவின் மறுப்பு அறிக்கை, சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்பான தாக்கீது எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் தாங்கள் வெளியிட்ட செய்தி உண்மைதான் என்றும் ஈவினிங் ஸ்டாண்டர்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக இங்கிலாந்து அரசியாரின் பக்கிங்காம் அரண்மனைத் தரப்பிலிருந்து எதுவித கருத்தும் தெரிவிக்கப்படவில்ல-7505;.