|
துணைப்படைக்குழு அசாத் மௌலானா வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் |
|
|
|
Saturday, 01 November 2008 |
|
கிழக்கின் துணைப்படைப் பி்ளையான் ஆயுதக் குழுவி்ன் பேச்சாளர் அசாத் மௌலானா என அழைக்கப்படும் ஆயுததாரியின் கல்லடியில் அமைந்துள்ள வீட்டின் மீது ஊர்ந்துருளியில் சென்ற இருவரால் இன்று காலை சிறிய வகைக் குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதன்போது வீட்டின் முன்புறம் மாத்திரமே சிறிய சேதத்திற்கு உள்ளானதாகவும், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீசப்பட்ட குண்டு உள்ளுரில் தயாரிக்கப்பட்டது என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதிகரித்துவரும் ஆயுததாரிகளுக்கு இடையிலான உட்பூசல் காரணமாக, அவர்கள் தமக்குள் மோதிகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நெருடல் இணையம்
|