பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow புதுடில்லி செல்கிறார் மஹிந்த
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புதுடில்லி செல்கிறார் மஹிந்த அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 02 November 2008

இலங்கையின் வடபகுதியில் இடம்பெறும் மோதல்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா செல்லவுள்ளார். 

இந்த மாதம் இரண்டாம் வாரம் புதுடில்லி செல்லவிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிகைச் சந்தித்து, இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள், இனப்பிரச்சினைத் தீர்வு, வன்னியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மனிதநேய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் புதுடில்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் ஆகியோரைச் சந்தித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் அமையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ஜனாதிபதிக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெறவுள்ள போதும், திகதி இதுவரை இறுதிப்படுத்தப்படவில்லையெனக் கூறப்படுகிறது.

மேலைத்தேய நாடுகள் கூறுவதைப் போலன்றி, மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவார் என உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது புதுடில்லி விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதுடில்லி செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..