|
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் பொதுமன்னிப்பு |
|
|
|
Sunday, 02 November 2008 |
|
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் படையில் இணைந்து கொள்ளக்கூடிய வகையில் இரண்டு வார கால பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலத்திற்குள் இராணுவத்தில் இணைந்து கொள்ளும் படைவீரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட மாட்டாதெனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைத் தேடி பாரிய தேடுதல் வேட்டைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமன்னிப்பு காலத்திற்கு பின்னர் கைது செய்யப்படும் இராணுவ உத்தியோகத்தர்கள், படைவீரர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.
நெருடல் இணையம்
|