பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow அம்பாறையில் துக்கதினத்தை முன்னெடுக்குமாறு ரிவிஎம்பி ஆயுததாரரிகள் மிரட்டல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அம்பாறையில் துக்கதினத்தை முன்னெடுக்குமாறு ரிவிஎம்பி ஆயுததாரரிகள் மிரட்டல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 03 November 2008

அம்பாறை கல்முனை ரி.எம்.வி.பி உறுப்பினர்கள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இன்று அப்பகுதியில் துக்க தினம் அனுஸ்ட்டிக்குமாறு ஆயுதக்குழுவினர்களினால் வர்த்தகர்கள் மிரட்டல் கல்முனை  பொதுச்சந்தியிலிருந்து பாண்டிருப்பு வரையிலான தமிழர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், அரச அலுவலகங்கள் என்பன மூடப்பட்டு துக்க தினம் அனுஸ்ட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் போக்குவரத்து சேவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வீதியில் மக்களின் நடமாற்றம் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு வாடி வீடு வீதியில் இனம் தெரியாத ஆயுததரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நான்கு ரி.எம்.வி.பியினர் கொல்லப்பட்டுள்ளார்கள் பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்து கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காமையினால் அவர் இன்று உயிரிழந்துள்ளதாக கல்முனை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


கல்முனை காவல்துறையினர் இத்தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..