பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு-- இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு-- இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 05 November 2008

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கறுப்பின அமெரிக்க ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மெக்கேய்னும் பேட்டியிட்டனர்.

297 தொகுதிகளைப் பெற்று பராக் ஒபாமா அமோக வெற்றி பெற்றுள்ளார். ஜோன் மெக்கேய்னுக்கு 139 தொகுதிகள் மாத்திரமே கிடைத்துள்ளன. 

முன்னொரு போதும் இல்லாதளவு இம்முறை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவானவர்கள் வாக்களித்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 233 வருடங்கள் கடந்துள்ள நிலையில் முதன் முறையாக கறுப்பின ஜனாதிபதியாக பராக் ஒபாமா (47) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷின் பதவிக்காலம் 2009ஆம் ஆண்டு ஜனவரியுடன் முடிவடைவதுடன், ஒபாமா ஜனவரி மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்பார். 
இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா
சிகாகோ: தனது சொந்த ஊரான சிகாகோவில் கிராண்ட் பார்க் மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே அவர் ஆற்றிய உணர்ச்சிகரமான உரை:

நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும்.

என்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் இந்த நாட்டுக்கு ஆற்றிய கடமைகளை இந்த நேரத்தில் எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. எனக்கு சரியான போட்டி தந்தாலும் என்னுடன் தனிப்பட்ட முறையில் அன்பையும் பகிர்ந்த அவருக்கு என் நன்றிகள்.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பிரச்சாரத்தை நாம் நடத்தினோம். இதற்காக கட்சியினருக்கும் எனக்குத் துணை நின்ற அமெரிக்க மக்களுக்கும் நன்றி. இந்த வெற்றி எனக்குரியதல்ல, இது அமெரிக்க மக்களின் வெற்றி.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட மாற்றம் வந்துவிட்டது. நமக்கு புதிய உத்வேகமும் பலமும் கிடைத்துள்ளது.

நாம் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நான் உங்களிடம் நேர்மையாக இருப்பேன். மக்களின் குரலைக் கேட்பேன். இந்த வெற்றி அமெரிக்காவுக்கு ஒரு புதிய விடியல்.

அமெரிக்காவின் இனவாதம் குறித்த கேள்விகளுக்கு இந்த வெற்றி ஒரு பாடம். இந்த வெற்றி நாம் உண்மையான 'யுனைடட்' ஸ்டேட்ஸ் தான் என்பதையும் நம் மக்களின் ஒற்றுமையையும் நிரூபித்துவிட்டது என்றார்.

ஒபாமாவின் பேச்சை கூட்டம் உற்சாகத்துடன் குரல் எழுப்பி கொண்டாடியது.

பின்னர் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடேனை ஒபாமாவை அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து ஒபாமாவின் மனைவி மிசேல், ஜோ பிடேனின் மனைவி ஆகியோர் ஒபாமா, பிடேனை வாழ்த்திநர்.

இதையடுத்து இருவரின் குடும்பத்தினரும் மேடையேறி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு உலக நாடுகளின் தலைவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்துள்ளன.
'ஒபாமா எபெக்ட்'-பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்
ஒபாமாவின் வெற்றியால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் புதிய உத்வேகம் காணப்பட்டது.

ஒபாமா வெல்லலாம் என்று தெரியவந்ததையடுத்து அமெரிக்க சந்தையில் நேற்று பங்குகளின் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

இதையடுத்து இன்று ஆசிய சந்தைகளும் ஏறுமுகத்தில் உள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய உடனேயே சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்ந்தது. இப்போது சென்செக்ஸ் 10,945 ஆக உள்ளது.

அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 98 புள்ளிகள் கூடின. இப்போது நிப்டி குறியீட்டு எண் 3,240  என்ற நிலையில் உள்ளது.

உலக அளவில் பங்குச் சந்தைகளில் ஏறுமுகத்துக்கு ஒபாமாவின் வெற்றியால் ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கையே காரணமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை அந்தக் காரணத்தோடு, கடன்கள் மீதான வட்டியைக் குறைக்குமாறு வங்கிகளுக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் உத்தரவிட்டதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..