பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow உலக தமிழருக்கான அவசர வேண்டுகோள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

உலக தமிழருக்கான அவசர வேண்டுகோள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 13 November 2008

வணக்கம்,

இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் வர்த்தக வரிச்சலுகையை நிறுத்தக்கோருவதே இந்தக் கடிதத்தின் நோக்கமாகும். உலகெங்கும் வாழும் தமிழர்கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உங்கள் வேண்டுகோளை எழுதி அனுப்பலாம்.

இதனைச் செய்வது மிகவும் எளிதானது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான். நீங்கள் அமெரிக்காவுக்கு வெளியே வாழ்பவராக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை அழுத்தி அதன் பின்னர்  உங்கள் முகவரியைக் கொடுக்கப்பட்ட  இடைவெளிகளில் நிரப்புங்கள். அதன் பின்"Send E-mail" ஐச் சொடுக்கினால் உங்கள் கடிதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையரைச் சென்றடையும்.

எங்களுடைய குறிக்கோள் குறைந்த பட்சம் 1000 கடிதங்களையாவது அனுப்பிவைப்பது என்பது. அவற்றில் 300 கடிதங்கள் அமெரிக்க நாட்டிலிருந்து  கிடைக்கும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசு வரிச்சலுகையைப் பெறத்தகுதியற்றது என்ற செய்தியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் செய்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் செவிசாய்க்க வேண்டுமென்றால் அதற்கு உங்கள் முழுமையான ஆதரவு அவசியம்.

உங்கள் நாளின் ஒரு மணித்துளியை எங்கள் உறவுகளுக்காக ஒதுக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த அத்தனைபேருக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பிவைத்து, அவர்கள் இந்த கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பிவைத்தார்களா என்பதை உறுதிசெய்யுங்கள். உங்கள் ஒவ்வொரு கடிதமும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை அமெரிக்காவிலிருந்து 87 கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. வரும் செவ்வாயன்று, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் எத்தனை கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்பதை உங்களுக்கு அறியத்தருகிறேன்.

உலகெங்கும் வாழும் ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் மின்னஞ்சல் குழுமம் ஒன்றை நாங்கள் உருவாக்கிவருகிறோம். எதிர்காலத்தில் ஐ.நா சபை மற்றும் சர்வதேச கொள்கை வகுப்பாளர்களை விழிப்புணர்வுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்த மின்னஞ்சல்களை எதிர்பாருங்கள். எங்கள் குரல்கள் உலகமுற்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டுமானால், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களாகிய நீங்கள் ஒருமித்த குரலில் இந்தக் கடிதங்களை அனுப்பிவைக்கவேண்டும். உங்களின் இந்தச் சேவை, எங்களின் உடனடித்தேவை.  இந்தக் கடிதத்தை அனுப்பிவைக்கக் கூடிய உங்கள் நாடுகளில் வாழும் ஆதரவாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உடனடியாக அனுப்பிவையுங்கள்.



From: PEARL Action Alert < action_alert@pearlaction.org This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >நன்றி


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..