|
வெற்றி எப். எம்மின் நிகழ்ச்சி முகாமையாளர் வாமலோஷனன், ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையினரால் கைது |
|
|
|
Saturday, 15 November 2008 |
|
தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) இன்று சனிக்கிழமை அதிகாலை வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது.
பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரைக் கைதுசெய்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டபோதிலும் பின்னர் அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
லோஷன் முன்னாள் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன 'சூரியன்' வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|