|
கருணா குழுவினரால் புலிகளும் இராணுவத்தில் ஊடுருவக்கூடும் |
|
|
|
Saturday, 15 November 2008 |
|
கருணா குழு உறுப்பினர்களை இராணுவத்திலும், ஊர்காவல் படையிலும் இணைத்துக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டு வரும் வேளையில் கருணா குழுவின் போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவத்திற்குள் ஊடுருவக்கூடும் என்று பாதுகாப்புத் தரப்பு அஞ்சகிறது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் விடுதலைப் புலிகள் கருணா குழுவின் போர்வையில் இராணுவ மேசையில் ஊடுருவினால் அது அம்பாறை, மட்டக்களப்பில் மாத்திரமல்லாமல் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும் என தெரிவித்துள்ளன.
இவ்வாறு ஊடுருவக்கூடிய ஒருவரால் உயர் பாதுகாப்பு வலயம் வரை சென்று இராணுவ இரகசியங்களைத் திரட்டவும், நினைத்ததைச் செய்யவும் முடியும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
நெருடல் இணையம்
|