|
ரகுவின் படுகொலையின் பின்னணியில் விடுதலைப் புலிகள்: கருணா தெரிவிப்பு; பிள்ளையான் மறுப்பு |
|
|
|
Saturday, 15 November 2008 |
|
பிள்ளையானின் இணைப்பு செயலாளர் ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் கொலையின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக ரகு பாதுகாவலர்கள் அற்ற நிலையில் தனியாக செல்வதில் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சரின இணைப்பு செயலர் ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் கொலைக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் காரணம் இல்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்தவன் என்ற அடிப்படையில் இந்த கொலையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பது தமக்கு தெளிவாக தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை பாணியில் இந்த கொலை அமையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டிருந்த இடத்தை தாம் நேரில் சென்று பார்த்ததாகவும் அந்த இடத்தில் விடுதலைப் புலிகள் இந்த கொலையை மேற்கொண்டார்கள் என்பதற்கான எந்த சான்றும் இருக்கவில்லை எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|