|
யாழ் முகமாலைப் பகுதியில் உக்கிர மோதல்கள் |
|
|
|
Sunday, 16 November 2008 |
|
பூநகரியை படையினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், நேற்று முகமாலையில் இருந்து படையினர் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர்.
பூநகரியை ஆக்கிரமித்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளை முகமாலையில் வெற்றி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நேற்று காலை யாழ் முகமாலைப் பகுதியில் வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்த சிறிலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்தன.
சனிக்கிழமை காலை 6.30 முதல் வலிந்த தாக்குதல்களை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டனர். முன்னேறும் படையினருக்கு ஆதரவாக பல்குழல் எறிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மிக் மற்றும் எம்.ஜ 24 உலங்குவானூர்திகளிலிருந்து தாக்குதல்களைப் படையினர் நடத்தியிருந்தனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் படையினர் தமது முயற்சியைக் கைவிட்டுள்ளனர். இதன்போது படையினருக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ள போதும் சேத விபரங்கள் இதவரை தெரியவரவில்லை.
நெருடல் இணையம்
|