பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow இராணுவத்தின் மீது பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் - விடுதலைப் புலிகளின் தலைவர்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இராணுவத்தின் மீது பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் - விடுதலைப் புலிகளின் தலைவர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 16 November 2008
பூனகரிப் பிரதேசத்திலிருந்து பின்வாங்கப்பட்டமை ஓர் யுத்த தந்திரோபாயம் எனவும், இன்னும் 3 மாதங்களுக்குள் இராணுவத்தினர் மீது பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா ஜெயனந்தமூர்த்தி மற்றும் சந்திரநேரு ஆகியோர் வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்த போது

அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என கொழும்பில் ஏனைய மொழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஜெயனந்தமூர்த்திக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தச் சந்திப்பு தொடர்பான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஜெயனந்த மூர்த்தி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
வன்னிக் களநிலவரங்களை குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாக பார்வையிட்டதாகத் கூறப்படுகிறது.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒருபோதும் தோற்கடிக்க முயாது எனவும், இறுதிப் போராளி உயிரோடு இருக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஜெயானந்த மூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் யுத்தத்தின் கோர விளைவுகளை தெற்கு சந்திக்க உள்ளதாகவும், யுத்தம் தொடர்பாக அரசாங்கம் மக்களை பிழையான வழியில் இட்டுச் சென்றுள்ளமையை மக்கள் உணரும் காலம் தொலைவில் இல்லை எனவும் அவர் சுட்டி;காட்டியுள்ளார்.
 
கிளிநொச்சியை ஒருபோதும் கைப்பற்ற இடமளிக்கப்பட மாட்டாதென விடுதலைப் புலிகள் சூளுரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கிளிநொச்சியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களை குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

 

ஆக்கபூர்வமான தீர்வுத்திட்டமொன்றைப் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைத்தால் சமஷ்டி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் எனவும், விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்திருப்பதாக சண்டே லீடர் பத்திரிகை தனக்கு நம்பகரமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..