பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow மாங்குளம் இன்னும் இராணுவத்திடம் வீழவில்லை?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மாங்குளம் இன்னும் இராணுவத்திடம் வீழவில்லை? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 19 November 2008

மாங்குளம் பகுதியை கடந்த திங்கட்கிழமை இராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. அங்கு தான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இருந்து மாங்குளம் இன்னும் விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

இராணுவ தரப்பில் நேற்று அதிகாலை தான் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஜெயவர்த்தனா மருத்துவமனைக்குக் நேற்று காலை காயமடைந்த ஏராளமான வீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.

இராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வடக்கு பகுதிக்கு பறப்பதும் இராணுவ வீரர்கள் உடல்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு திரும்புவதுமாக இருந்தன.

இராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை இலங்கை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாக தெரியவில்லை.

கிளிநொச்சி பகுதியில் கடந்த 3 நாட்கள் நடந்த சண்டையில் மட்டுமே 200 சிங்கள வீரர்கள் பலியாகி இருப்பதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

ஆனாலும் 3 நாள் போரில் சிங்கள வீரர்கள் 200 பேர் பலியாகி இருப்பதாக இலங்கை பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..