பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow யாழ் செல்பேசிகள் நிறுத்தப்பட்டது ஏன் : பலாலி மீது விடுதலைப் புலிகள் எறிகணை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யாழ் செல்பேசிகள் நிறுத்தப்பட்டது ஏன் : பலாலி மீது விடுதலைப் புலிகள் எறிகணை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 19 November 2008

யாழ் குடாநாட்லுள்ள பலாலி வான்படைத் தளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் துல்லியமான எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளாக,  யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எறிகணைகள் பலாலி படைத்தளத்தினுள் வீழ்ந்து வெடித்த பின்னரே யாழ்ப்பாணத்திற்கான செல்பேசிகள் கடந்த ஐந்து நாட்களாக படையினரால் தடை செய்யப்பட்டிருந்தன.


விடுதலைப் புலிகளின் நெடுந்தூர எறிகணைகள் பலாலியில் மையப்பகுதியில் வீழ்ந்து வெடித்ததை எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட சேதவிபரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை.


முகமாலையூடாக முன்னேற முற்பட்ட படையினரை வழிமறித்து தாக்கியவாறே விடுதலைப் புலிகள் பலாலி படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இதனைத் தொடர்ந்தே சிறீலங்கா படையினர் முகமாலை மற்றும் பளைப் பகுதியில் கடும் வான்வழி வானூர்தித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.


பூநகரியைக் கைப்பற்றினால் விடுதலைப் புலிகளின் நெடுந்தூர எறிகணைகளால் தாம் இலக்குவைக்கப்பட மாட்டோம் என்ற சிறீலங்கா அரசின் பரப்புரையை விடுதலைப் புலிகள் தமது இந்தத் தாக்குதலின் மூலம் தகர்த்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..