|
முகமாலை மோதல்களில் படையினருக்கு இன்று பலத்த சேதம் உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 450 பேர் பலி 750 ப |
|
|
|
Thursday, 20 November 2008 |
|
முகமாலை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற மோதலில் 200ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும்
200ற்கு மேற்பட்ட படையினர் காயம் அடைந்தும் இருப்பதாக அரசாங்க உள்ளகத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆயினும் இன்றைய மோதல் குறித்து வெளியாகி உள்ள மற்றைய தகவலில் பரந்தன் நோக்கிச் சென்ற இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு அற்றிருப்பதாகவும்
அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் படையினர் கைப்பற்றிய முக்கிய பிரதேசம் ஒன்றை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இவை குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை இருதரப்பிடமும் உறுதிப்படுத்த முடியவில்லை.
நவம்பர் மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை 690 ராணுவத்தினர் காயம் 200 ராணுவத்தினரின் சடலங்கள் மலர்ச்சாலையில்:
நவம்பர் மாதம் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வன்னியில் இடம்பெற்ற மோதல்களில் 750 பேர் வைத்தியசாலைகளில்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் 235 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் 85 பேர் களுபோவில வைத்தியசாலையிலும் 90 பேர் ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியிலும் 200 பேருக்கும் மேற்பட்டோர் இராணுவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
“சிந்தனைக்கு மூன்று வருடம்- நாடு முடிந்து விட்டது” என்ற தலைப்பில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் தொடர்ந்து கூறுகையில்: படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்படும் வகையில் இந்த அரசாங்கம் முட்டாள்தனமான யுத்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. நேற்று முதல் (19) மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் பிரேக்கிங் நியுஸ் மூலம் அந்தச் சந்தியைப் படையினர் பிடித்து விட்டனர். இந்தச் சந்தியைப் படையினர் பிடித்து விட்டனரென செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன.
புலிகளைத் தோல்வியடையச் செய்ய வேண்டுமென்பதோ வடக்குக் கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதோ இன்றைய அரசின் நோக்கமல்ல.. நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைவதற்கு முன்னர் ஒரு பொதுத் தேர்தலை நடத்தி அதில் வெற்றி ஈட்டுவதற்கு மக்கள் ஆதரவினைப் பெறுவதற்காகவே இந்த முன்னெடுப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நெருடல் இணையம்
|