பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow அக்கரைப்பற்றில் இரு இளைஞர்கள் கருணா குழுவினரால் சுட்டுக்கொலை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அக்கரைப்பற்றில் இரு இளைஞர்கள் கருணா குழுவினரால் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கருணா குழுவினரால் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் உள்ள கண்ணகிபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கண்ணகிபுரம் பகுதியை சேர்ந்த எம்.அர்ஜுன்(19வயது),ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த ஆர்.அன்புமணி (22வயது) ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் உடலங்களும் கருணா குழுவினரால் உடனடியாக அப்பகுதியில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாகவும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்தன.
 

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் தேடுதல் மேற்கொண்டதுடன் ரி56 துப்பாக்கி ரவைகள் சிலவற்றை மீட்டதாக தெரிவித்தனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..