|
|
|
இந்தியாவின் கால்களில் மண்டியிடும் ஆனந்தசங்கரி |
|
|
|
Tuesday, 13 September 2005 |
|
இந்தியாவின் கால்களில் மண்டியிடும் ஆனந்தசங்கரியும். பாரதத்தை உடைத்து பாக்கிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவும்! 
இந்தியாவின் காலடியில் ஏன் ஈழத்தமிழர்கள் அல்லது ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் மண்டியிட வேண்டும்.? தமிழீழத்தை அமைக்க ஏன் இந்தியாவின் அனுமதியை நாட வேண்டும்.? இந்தியாவை ஈழத்தமிழர்கள் பகைக்கக்கூடாது என்று யாராவது சொல்ல வந்தால் ஒரே வாhத்தையில் இந்தியாவை எப்பொழுதும் ஈழத்தமிழர்கள் பகைக்கவும் இல்லை இனியும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பதில் சொல்லி விடலாம். இந்தியா ஈழத்தமிழர்களுக்கு அயலில் இருக்கும் மிகவும் நெருக்கமான உறவுடைய ஒரு வல்லரச நாடு என்பது ஈழத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் அறிவர். இந்தியா ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இளைக்கிறதே ஒளிய ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு எந்தவகையுpலும் துரோகம் இழைக்கவில்லை.
ஆனந்த சங்கரியும் அவரைப்போன்றவர்களும் கூச்சலிடுவது போல ஈழத்தமிழர்கள் தமது தாயகத்தை அமைப்பதற்கான உரிமையை இந்தியா எந்தவகையிலும் தடுக்கமுடியாது. அதற்கான எந்தக்காரணங்களும் ஜெதார்த்த பூர்வமாக இருப்பதாக தெரியவில்லை. தமிழீழம் தனிநாடாக மலர்ந்தால் அது இந்தியாவின் ஒருமைக்கு ஆபத்தாகலாம் என்றோ இந்தியா உடைந்து பல நாடுகளாக பிறப்பெடுப்பதற்கு காரணமாகிவிடும் என்றோ சொல்லமுடியாது. இதற்கு இந்தியாவுக்குள்ளேயே விளக்கம் இருக்கிறது இங்கிலாந்திடம் இருந்த விடுதலை பெறுவதற்காக போராடிய இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற சில காலத்திலேயே உள்நாட்டுப் போரொன்றிற்கு முகம்கொடுக்க நேரிட்டு இறுதியாக இந்தியாவில் இருந்த காந்தியுடன் விடுதலைக்காக போராடிய ஜின்னா வெள்ளையருடன் போராடி களைத்திருந்த மக்களை வைத்தே போராட்டத்தை ஆரம்பித்து பாக்கிஸ்தான் என்ற ஒரு புதிய நாட்டை இந்தியாவில் இருந்து உடைத்து உருவாக்கியிருந்தர்h. அதன்பின்னர் பாக்கிஸ்தான் என்ற நாட்டை உடைத்து வங்காளதேசத்தை இந்தியா அமைத்தது இவை அனைத்தும் நிகள்ந்து இன்று எத்தனை ஆண்டுகள்? அதற்குப்பிறகு உடையாத இந்தியா. அயலில் உள்ள தீவில் தமிழீழம் அமைவதால் இந்தியா உடைந்துவிடும் என்று சொல்லுவது அர்த்தமற்ற அரசியலாகும் வீண் பிரமைபிடித்த தன்மையாக மட்டுமே இதைப் பார்க்க முடியும். இலங்கையில் தமிழர்களின் சார்பான அரசியற்கட்சிகள் காலம் காலமாக இந்தியாவின் கலடியில் கிடப்பதற்கும் இன்று அவ்வாறு இந்தியாவிடம் கையேந்தவேன்டிய அவசியம் இல்லை என்பதற்கும் ஒரு தகுதியான விளக்கத்தை இங்கே முன்வைக்கவேண்டியுள்ளது. இலங்கை அரசுடன் தமிழர்களின் உரிமைகளை பேரம் பேசி பெற்றுக்கொள்வதற்கு தமிழர்விடுதலைக் கூட்டணியினரும் ஏனைய அரசியற் கட்சியனரும் எந்தவகையிலும் பின்பலத்தை கொண்டிருக்கவில்லை வெறும் அரசியற்கட்சிகளாக தமிழர்களின் அரசியற்பிரதிநிதிகளாக செயற்பட்டுக் கொண்டிருந்த மேற்படி கட்சிகளால் அறவளிப்போராட்டத்தை மேற்கொள்ள மட்டுமே முடிந்தது இதற்கு மேல் தமது மக்களின் உணர்வுகளை அயலில் இருக்கும் இந்தியாவிடம் ஓடிச்சென்று முறையிடத் தொடங்கினர் புல்தரவையை தேடி ஓடு மந்தைகளைப்போல் கனல் நீரைத்தேடி இன்றைக்கு ஆனந்தசங்கரிவரைக்கும் இதையே செய்கின்றனர். இந்த ஆற்றாமைக்காறர்களை இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்க நலனை பேனுவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறதே ஒளிய தமிழர்களுக்கு இந்தியா எதையும் இன்றுவரை செய்ததில்லை. அற்ப்ப சலுகைகளைக்கூட தமது அரசியல் நலன்களுக்காகவே இந்தியா செய்வதை. அரசியலை ஆளமாகப் புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.. இந்தியா ஏன் ஈழவிடுதலை போராழிகளுக்கு பயிற்சி வளங்கியது, ஏன் ஈழவிடுதலை போராழிகளை பல குழுக்களாகவே வளர்த்தது என்ற உண்மைகளை வெளிப்பலடயாக தமிழீழ மக்களுக்கு பட்டிதொட்டியெல்லாம் சொல்லப்பட்டீ ருக்கவேண்டும் ஏனோதெரியவில்லை புலிகள் அவ்வாறான பரப்புரைகளை தவிர்த்து விட்டனர். ஒரு வேளை இந்தியப்படைகளின் வரவுக்குப்பிறகு தமிழீழமக்களுக்கு இந்தியாவின் உண்மை உருவம் தெரிந்துவிட்டதாக எண்ணியிருக்கலாம். ஆனால் மறைந்த ஊடகவியலாளர் சிவராம் அரசியல்ரீதியாக புலிகள் மக்களை அனுகவேண்டிய தேவை இன்னும் இருப்பதாக கூறியிருந்ததிலிருந்து மக்களுக்கு காதில் மேடைபோட்டு சொல்லவேண்டிய தேவைகள் இருப்பதை அவரின் கருத்து வெளிப்புடத்தியிருந்தது. இன்றைக்கும் இந்தியாவை தமது மீட்பராக நம்புகின்ற தமிழர்களை நான் இக்கட்டுரைக்கான தேடலின்போது கண்டிருக்கிறேன் எனவே மக்களிடம் மேலும் காலத்தின் கட்டாய அரசியலை புலிகள் தெழிவுபடுத்துவதற்கு சிறந்த மேடைப் பேச்சாளர்களை நிறுத்த வேண்டும் ஊடகங்களில் எழுதுவதாலும் சொல்வதாலும் முற்றுமுளுதாக சமகால அரசியல் நிலமைகளை மக்கள் அறியாதவர்களாகவே இருப்பர் இதனால் சங்கரிபோன்றவர்களின் வாய்களுக்கும் மதிப்பு ஏற்பட வாய்ப்பாகிவிடுகிறது என்றுதான் படுகிறது.இதை இத்துடன்விட்டு இந்தியாவின் பக்கம் தொடர்வோம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை தோற்கடிப்பதற்கான நீண்டகாலத் திட்டத்துடனும். அந்த நீண்டகாலப்பகுதியை இலங்கைதீவை தனது வல்லாதிக்க ஆளுமைக்குள் வைத்திருக்கவுமே இந்திய கொள்கை வகுப்பாளர்கள் திட்டமிட்டு செயலாற்றினர். இதன் முக்கிய சூத்திரதாரியாக கே.என். டிக்சிற் விளங்கியிருந்தார். டிக்சிற் வகுத்த திட்டத்தின் விளைவே தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு ஆண்ம பலத்தையும் தேசியத்தலைவர் பிரபாகனை தமிழர்களின் உண்மையான மீட்பர் என்பதையும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட இன்றும் உலகப்பரப்பிற்கே எடுத்துச் செல்லவும் உதவியது என்றால் மிகையாகாது இந்தியா தமது நலன்களுக்கு பயன்னடாமல் ஈழத்தமிழர்களின் விடுதலையை மட்டுமே தனது ஒரே நோக்காக கொண்டிருந்த தேசியத்தலைவரையும் அவரைச்சார்ந்த விடுதலைப்புலிள் இயக்கத்தையும் தமிழீழத்திலிருந்து அப்புறப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு இராணுவ வளி முறைகளையும் பல்வேறு சதிப்புரட்சிகளையும் முன்னெடுத்தனரே ஒளிய வேறெதையும் இன்றுவரை உருப்படியாக சிந்திக்கவில்லை. டிக்சிற்றும் போய்விட்டார் இந்தியாவின் நிளல் யுத்தம் போகவில்லை இந்தியா ஈழத்தமிழர்களுக்கு என்றும் மண்குதிரையான நிலைதான். மேற்சொன்ன நிலையில் இன்று தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இந்தியாவின் கலடியில் மண்டியிட்டு சலுகைகளுக்காக ஏங்கும் நிலையில் இல்லை. என்பதை தேசியத்தலைவர் இந்தியாவின் நயவஞ்சக அரசியலைப் புரிந்து கொண்டு எப்பொழுது தமிழீழத்தில் விடுதலைப் போராட்டத்தின் பிரதான தளத்தை நிறுவினாரோ அதைத்தொடர்ந்து என்று இந்தியப் படைகளுடன் போராடி தாயகவிடுதலைக்கான தனது தீர்க்கதரிசனமான நடவடிக்கைகளை முன்னெடுத்தாரோ அன்றே இந்தியா ஈழத்தமிழர்களின் நேச சக்தியாக மட்டும் விரும்பினால் விளங்கலாமே தவிர இந்தியாவின் ஆதரவையோ இந்தியாவின் அனுமதியையோ ஈழத்தமிழினம் எதிர்பார்க்க தேவையில்லை என்பதை முடிவாக நடைமுறையில் தெரியப்படுத்திவிட்டார். இதன்பின்னர் இந்தியப்படைகள் வெளியேற்றப்பட்டு இலங்கை அரசபடைகளுடன் போராடத்தொடங்கி கெரில்லாப் போராட்ட வடிவமாக இருந்த விடுதலைப்போராட்டத்தை மரபுவளிப்படைகளாக மாற்றி தாயகப்பரப்பில் ஆக்கிரமித்திருந்த படைகளை அகற்றி கைப்பற்றிய பகுதிகளில் தமிழீழத்தனியரசின் அரச இயந்திரத்தை நிறுவி இன்று முற்று முளுதான நிர்வாக கட்டமைப்புக்களுடன் தமிழர்களின் ஆட்சியை அங்கு நடைமுறைப்படுத்திய நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் இன்றைக்கு ஆனந்த சங்கரியும் அவர்போன்றவர்களும் கூறுவது போல் இந்தியா தமிழீழத்தை அங்கீகரிக்காது என்பதைக் பற்றி ஈழத்தமிழர்கள் சிந்திக்கத் தேவையில்லை அயல்நாடான இந்தியா தமிழர்தாயகத்தை அங்கீகரிக்கவேண்டிய கடப்பாடு இருக்கிறதேயொளிய இந்தியா அங்கீகரிக்காது என்பதற்காக தமிழர்கள் இந்தியாவிடம் இன்று மண்டியிடத் தேவையில்லை. உலகமே தமிழர்கள் தமது தாயகத்தை அமைத்துவிட்டார்கள் என்பதை புரிந்திருக்கும் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மேற்கொண்டு தனது இராணுவ மேலாதிக்கத்தை எப்பொழுதும் நிரூபிப்பதற்கு தயாரான நிலையில் பேச்சுவார்த்தை ஒன்றின் மூலம் உலகின் அதரவுடன் தனது உரிமைகளை பெற முயற்ச்சிக்கவேண்டிய நாட்களே இன்றைய நாட்கள். இன்றைய நாட்களில் தேசியத்தலைவரால் இந்த நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப் படுகிறது மேற்சொன்ன விடையங்களை கண்டு கலங்கும் இந்தியாவும் இலங்கையும் இன்றைக்கு தமிழர்களின் தலைவன் பிhகரன் என்பதை தமிழீழமக்களைவைத்து நிராகரிக்க ச்செய்வதற்காக உதிரி அரசியற்கட்சிகளைவைத்து அரசியற் சதுரங்கம் ஆடிவருகிறது. கடந்த தேர்தலில் ஆனந்தசங்கரியையும் டக்கிளஸ்தேவானந்தாவையும் மக்கள் ஓரம் கட்டிவிட்ட நிலையுpல். கருணா என்ற புதிய வேதாளத்தை பயன்படுத்தி கிளக்கு தமிழீழத்தை பிரித்து தேசியத்தலைவரின் அதிகார எல்லைகளை மட்டுப்படுத்துவன் மூலம் தமது எண்ணங்களை சாதிக்க முற்பட்டு அதிலும் தோற்றுப்போய் இயலாமையின் வளிம்பில் இன்று எதைச்செய்வது என்று தெரியாமல் சங்கரி போன்றவர்களை ஏவி உலகப்பரப்பில் உள்ள தமிழினவிரோத சிந்தனையாளர்கள், சாதிய வெறியாகள், பளமைவாத சிந்தனையாளர்கள், இந்தியாவை நம்பும் குருடர்களை இனங்கண்டு கூட்டங்களையும் மகா நாடுகளையும் நடத்தி வருகின்றனர். தமிழர்கள் தமக்கான தனி அரச இயந்திரத்தை இயக்கிவரும் இன்றைய நாளில் சுனாமி நிவாரணத்திற்கு பொதுக்கட்டமைப்பு தேவையில்லை அரச இயந்திரத்தினுடாக மக்களுக்கு நிவாரனம் வளங்கலாம் என்று சலுகைகளுக்காக மானத்தை விற்ற ஆனந்தசங்கரி மானத்திற்காக உயிரை விடும் தமிழர்களைப்பார்த்த புலம்புவது வேடிக்கையும் வினோதமுமாகும். தமிழினம்; இதுவரை போராடி தனக்கென்றொரு தாயக்தை அமைப்பது பின்னர் சிறீலங்கா அரச இயந்திரத்தை அளைத்து தமிழீழ நிர்வாகத்தை தமழீழ மக்களை வளிநடத்தச் சொல்வதற்காகவா? அல்லது துரோகிகளுக்கு மாலைசூடி அவர்களின் குடும்பங்களை வளப்படுத்துவதற் காகவா? தமிழீழமக்கள் தமது அரசியற் தெளிவுடன் உள்ளனர்.சமகால உண்மை நிலைகளை அவர்களுக்கு தெரியபபடுத்தினால் போதும் துரோகிகளும் துரோகங்களும் தோற்றுப் போககும் தேசியத்தலைவரினதும் போராழிகளதும் தமிழீழ மக்களதும் கனவு நினைவாகும். இந்தியா ஈழத்தமிழர்களின் நேச சக்தியாக விரும்பினால் தொடரலாம் இல்லையேல் தொல்லை தராமல் ஒதுங்கலாம். ஈழத்தமிழர்களோ ஈழத்தமிழர்களின் அரசியற் பிரதி நிதிகளோ இந்தியாவிடம் அனுமதி பெற்று தமது தாயகத்தை அமைப்பதற்கான எந்தத் தேவையும் இல்லை பங்காளதேசத்தை உருவாக்கியதுபோல் எமது தாயகத்தை உருவாக்க எமக்கு இன்று இந்தியாவின் தயவு தேவையில்லை பாக்கிஸ்தானை உருவாக்கிய ஜின்னா இந்தியாவை உடைத்து பாக்கிஸ்தான் என்ற நாட்டை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆசியை பெற்றிருக்காத நிலையில் ஆனந்தசங்கரி போன்ற புலம்பல்காறர்களின் கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு தமிழீழ தேசியத்தை பாது காப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் கரங்களையும் தேசியத்தலைவரின் கரங்களையும் பலப்படுத்தி இரானுவ மேலாதிக்கத்தில் நின்று தமது உரிமைகளைப் பெறுவதற்கு தமிழாகள் திறந்த மனதோடு உளைக்க முன்வரவேண்டும். இன்னுமொரு கொடிய போருக்கு முகம் கொடுப்பதற்கு தயாராக வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவருகிறது இதை ஏற்றால் ஒளிய இன்றைய நிலையில்சிங்களத்துடன் பேசி எதையும் சந்திக்க முடியாது. நீலன்.
nilan
|
|