பிரதான பக்கம் arrow காணொளி arrow ஈழக்கிழவனின்... பனையடி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஈழக்கிழவனின்... பனையடி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 27 October 2005
ர..ரா..ர..ரா
என்ன
கிழவனுக்கு இஞ்ச மாரிகாலத்து
மழைக் குளிரில
பல்லுக்கிட்டுதோ
எண்டு
யோசிக்கிறியளோ!
அல்லாட்டி
சந்திரமுகியில மயங்கி
கிறங்கி
அசந்து
அலட்டுறன் எண்டு
நினைக்கிறியளோ!
நான் சொன்னது
இந்திய ர..ரா..இல்ல
சிலோன் ர..ரா ..
என்ன!
கிழவன் துள்ளி விளையாடுது
எண்டு
குழம்பாதையுங்கோ

ர வின்ர விரிவாக்கம்
ரணில்
ராவின்ர விரிவாக்கம்
ராஜபக்ச

சிரிப்பு வரும்
சீரியசா இருங்கோ

மாரி இப்ப தான்
ஒண்டு இரண்டு துளியை
விட ஆரம்பிச்சிருக்குது
ஆனால்
ர ராவின்ர மழையால
ஒரே வெள்ளப் பெருக்கு
தேர்தல் விஞ்ஞாபனங்கள
திறந்து விட்டிருக்கினம்

அப்பிடிப் போடு!

எங்க இருந்தப்பா
உவைக்கு
நல்ல வார்த்தைகள்
மக்கள் சேவைக்கருத்துகள்
வருகுது
சும்மா சொல்லக்கூடாது
வாக்குறுதியள கேட்டா
கண்செருகும்

கடந்த காலங்களையெல்லாம்
எந்த
கங்கையில மூழ்கி
புனிதமாக்கி
மேடைக்கு வந்து
விளாசியினமோ தெரிய இல்ல
ரா சொல்லுறார்
தனக்கு முன்னுக்கு
கணக்க சாவல்கள்
நிக்குதாம்
மன்னிக்கவேணும்
சவால்கள் நிக்குதாம்

இஞ்ச பாருங்கோ
பலி எடுக்கிற பரம்பரைக்கு
முன்னால
சவாலைப் போட எப்பிடி
மனம் வரும்
சாவல்களைத்தானே
போடலாம்

ரா பாருங்கோ
கூட்டு வச்சிருக்கிறது
தமிழரை கூண் போட
புடுங்கவேணு மெண்டு
நாண்டு
பிடிக்கிறவையெல்லே
பிறகென்ன
இவர் மேடையில
வெட்டிப் புடுங்கிறார்
வெண்டிருவாரோ
வெண்டால்
தமிழருக்கு சுகம்
தந்திடுவாரோ

இப்பவும் சிங்கள
ஐயாமாருக்கு
தமிழர் தங்களை
தங்கட கதையள
நம்புகினம் எண்டு
ஒரு நம்பிக்கை இருக்கு
பாலம் பாருங்கோ அலை
தமிழர்கள் தங்களை நம்பியே
வாழவெளிக்கிட்டு
எவ்வளவு காலம்
இன்னும்
இந்த விசயம்
கனக்க வெங்காயங்களுக்கு
விளங்க இல்ல
பிறகும் பிறகும்
ஆருக்கு கதைவிடுறியள்

ரரா..

ரவுக்குப் பின்னால
குட்டிக்குட்டிக்
கட்சியெல்லாம்
வண்டிகட்டி ஞஉக்க
ரவும் வெட்டி விμத்துறார்
ர சொல்லுறார்
இனப்பிரச்சனை சம்மந்தமா
மக்களட்ட
கருத்துக் கணிப்பு எடுப்பம்
எண்டுறார்
பேந்தும் பாரடா!

சனாதிபதியா வந்தா
காலத்தை இμத்தடிக்க
ஏதாவது வேணுமெல்லோ
இலேசுப்பட்ட ஆளில்ல
ரவும்,
மக்கள் கருத்தோ!
மக்களைப் பற்றி அப்ப
இனித்தான்
மகாராசா ரவும்
அறியப் போறாரோ
நல்ல கதையடா `மேனே'
ரவின்ர ஆக்கள் கேக்கினம்
ராவை ரவுக்கு சப்போட்
பண்ணச் சொல்லி

கொஞ்சம் சிரிங்க

அரசியல் ஒத்த சொல் நகைச்சுவை
ரவும் விளாச
ராவும் விளாச
சிலோனில ரரா...

ஆனால் கிங்மேக்கர்...
பேசாமல் இருக்கிறார்
பேசுவார் நவம்பர் 27ல்
காத்திருங்க அர்த்தமிருக்கும்

பொன். காந்தன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..