பிரதான பக்கம் arrow ஏனையவை.. arrow கவிதை: கும்மியடி பெண்ணே... கும்மியடி..
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கவிதை: கும்மியடி பெண்ணே... கும்மியடி.. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 27 October 2005
கும்மியடி பெண்ணே, கும்மியடி
- பெருங்
கூட்டத்துடன் வந்து கும்மியடி!
நம்முடை மண்ணில் ஜனாதிபதி தேர்தல்
நாடகமே என்று கும்மியடி!
தென்னிலங்கை என்னும் தீவினிலே
- எங்கள்
செந்தமிழர் இன்னும் தீயினிலே!
முன்னிருந்தே இந்தத் தீயை மூட்டுவ(து) இம்
மூடர் தேர்தலென்று கும்மியடி!
அள்ளி வீசிடுவர் வாக்குறுதி
- இங்கு
ஆயிரம் பேசுவர் காப்புறுதி!
நள்ளிரவு வரை நா சலிக்காமல்
நடிப்பர் என்று சொல்லி கும்மியடி!
புத்தர் பெயர்சொல்லும் பித்தர்களும்
- கொல்லும்
போர்வெறி கொண்ட கயவர்களும்
மெத்தப் புனிதர்போல் வேடங்கட்டி ஆடும்
மேடை இதுவென்று கும்மியடி!
 
நீலிக் கண்ணீர் வடிக்கின்றவரும்
- நெஞ்சில்
நேர்மையராய் நடிக்கின்றவரும்
கூலிக்கு மாரடிக்கின்றவரும் வந்து
கூத்தடிப்பார் என்று கும்மியடி!
 
பச்சைப் புளுகை விதைப்பவரும்
- கள்ளிப்
பாலைப் `பருகு!`எனச் சொல்பவரும்
பிச்சைக் கலங்கள் சுமந்தபடி வரும்
பேரணி இதென்று கும்மியடி!
 
ஐந்து வருடத்துக் கோர்முறைதான்
- இந்த
ஆட்சியாளருக்குக் கண்விழிப்போ?
நைந்து வருந்தும் தமிழரிடம் திடீர்
நட்பென்னவோ என்று கும்மியடி!
மாடு, மனை, நிலம், வீடிழந்து
- தமிழ்
மாந்தர் உழன்றிட வைத்தவர்கள்,
நீடு சுதந்திரம் நல்குவது என்ன
நிச்சயமோ என்று கும்மியடி!
 
இன்னும் விடுதலை கிட்டவில்லை
- எங்கள்
ஈழம் சுயநிலை எட்டவில்லை:
பின்னும் எதற்கிந்த பித்தலாட்டமென்று
பெண்டிர் குடும்பமே, கும்மியடி!
 
நாங்கள் பிறந்தது ஈழமடி
- அந்த
நாடு தமிழ்ப் பெரு ஞாலமடி!
தீங்கு வயப்படு சிங்களப் பேரினத்
தேர்தல் விழல்என்று கும்மியடி!

தொ. சூசைமிக்கேல்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..