 நான் தலைவரைச் சந்தித்து சுனாமி பற்றிய செய்தியைக் கூறுவதற்கு முன்னர் தலைவர் எல்லா விடயங்களையும் அறிந்திருந்தார். இயக்கத்தின் அனைத்துத் துறையினருக்கும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்குரிய ஆலோசனைகளைக் கூறிக்கொண்டிருந்தார். இயக்கத்தின் அனைத்து வளங்களையும் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்கான உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தார். தனது மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்த போராளிகளிலிருந்தும் கூட மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆளணிகளை அனுப்புவதிலேயே குறியாகயிருந்தார். யுத்தம் செய்து மீட்ட முல்லைத்தீவை நாங்கள் பார்க்கின்ற பொழுது பெரும் ஆக்கிரமிப்பை வென்ற நிலையில் பெரும் நகரத்தைக் கைப்பற்றிய வெற்றிக்களிப்பில் தான் எங்களது பார்வை இருந்தது. அதனால் அழிவுகள் எங்களைத் தாக்கவில்லை. எங்களை மீறிய இயற்கையின் சக்தி இப்படிப் பெரும் அழிவை ஏற்படுத்தியிருப்பது பெரும் சோகமான நிகழ்வு என சுனாமி களமுனையில் நின்று நிலைமைகளை நேரடியாக அவதானித்துச் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்ததளபதியும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருமான பொட்டு அம்மான் அவர்கள் பகிர்ந்துகொண்டவற்றை இந்தப் பகுதியிலும் தருகிறோம்.
அன்று பிற்பகல் ஐந்து மணியளவில் தளபதி தீபனும் நானும் மருதங்கேணி வைத்தியசாலைக்குப் போனோம். அங்கே உயிரி;ழந்தவர்களின் உடல்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. ஒரு வைத்தியசாலையே மரண வீடாக இருந்தசூழலை நான் அன்றுதான் முதலில் பார்த்தேன். வேதனையாக இருந்தது. அந்த உடல்களை அடக்கம் செய்வதற்கான ஒழுங்குபடுத்தல்களில் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் தலைமையிலான அரசியல்துறைப் போராளிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். சுனாமியால் உயிரிழந்த இவ்வளவு தொகையானவர்களின் உடல்களை நான் கண்டதும் வடமராட்சி கிழக்கில்தான். வடமராட்சி கிழக்குடன் ஒப்பிடும் போது முல்லைத்தீவு பேரிழப்பைச் சந்தித்திருந்தது. முல்லைத்தீவில் குறுகிய இடத்தில் பெரும் அழிவு ஏற்பட்டிருந்தது. வடமராட்சி கிழக்கில் நீண்ட பிரதேசத்தில் இந்த இழப்பு ஏற்பட்டிருந்தது. வடமராட்சிகிழக்கில் அழிவுகளை பார்க்கின்றபொழுது மாலை நேரமாகியதால் அதன் நிலவரம் முழுமையாகத் தெரியவில்லை. வீடுகளின் சுவர்களின் முக்கால்வாசி உயரத்துக்குமேல் தண்ணி ஏறிய தடங்களைப் பார்த்தோம். இந்த நிலையில் தமிழீழத்தின் அநேகமான கரையோரக் குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று வந்தவன் என்ற அடிப்படையிலும் முல்லைத்தீவின் அழிவுகளை நேரடியாகப் பார்த்த நிலையிலும் இழப்புக்கள் தொடர்பாக உடனடிக் கணிப்பீடு ஒன்றைச் செய்திருந்தேன். என்னால் செய்யப்பட்ட அந்தக் கணிப்பீடு சிலவேளைகளில் மிகைப்படுத்தபபட்டதாகவும் இருந்திருக்கலாம். சுனாமி அலைகள் முல்லைத்தீவைத் தாக்கிய மாதிரி வேகத்தோடு தமிழீழத்தின் கரையோரப்பிர தேசங்களைத் தாக்கியிருந்தால் தமிழீழ மக்களில் ஐம்பதாயிரம் பேரை நாங்கள் இழந்திருப்போம் என்று தான் நினைத்தேன். அந்தவேளையில் எனது நினைவு அப்படித்தான் இருந்தது. இப்படியான இயற்கையின் சீற்றத்தால் எங்கள் மக்களை இழந்ததும் குடியிருப்புக்களை பறிகொடுத்ததும் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது. அது பேரதிர்ச்சி, பெரும் சோகம். இந்த நிலையில்; நாங்கள் எப்படியான உடனடி வேலைகளைச் செய்யவேண்டும்? என்கின்ற எண்ணங்கள் தான் எங்களின் முன்; இருந்ததே தவிர இந்த சம்பவங்களின் ஒட்டுமொத்த பரிமாணத்தை யோசிக்கவில்லை. ஏற்கனவே நீண்ட தொடா ;யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இது ஒரு பேரடி என்பதைத்தான் என்னால் அந்த இடத்தில் சிந்திக்க முடிந்தது. இந்திய இராணுவம் வெளியேறியதன் பின்னர் மணலாறில் இருந்து முல்லைத்தீவிற்கு வந்து நகரைச் சுற்றிப்பார்த்தோம். வாகனங்களை நிறுத்திவிட்டு உணவகத்தில் உணவு அருந்தினோம். நான் முதன் முதலில் முல்லைத்தீவிற்கு வந்த சந்தர்ப்பம் அதுவாகத்தான் இருந்தது. அப்போது முல்லைத்தீவு ஒரு பெரிய விசாலமான நகரமாக இருந்தது. பின்னர் யுத்த நடவடிக்கைகளால் அதன் பரிமாணங்கள் அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப் பட்டதன் பின்னர் ப+ச்சியத்தில் இருந்து ஐம்பது வீதமளவுக்கு மீளவும் கட்டியெழுப்பிக் கொணடிருந்த நிலையில் சுனாமி அனைத்தையும் அழித்து மீண்டும் ப+ச்சியநிலைக்கு கொண்டு போய்விட்டது. எந்தக் கடுமையான யுத்த சூழலிலும் முல்லைத்தீவு இப்படியான பேரதிர்ச்சி தரக்கூடிய மனித அவலத்தைச் சந்திக்கவில்லை. யுத்த மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில் மக்கள் தங்களை காப்பதற்காக இடம்பெயர்ந்து சென்று பெரும் அழிவுகளில் இருந்து தப்பித்துக் கொண்டனர். அப்படி இருந்தும் ஒருசில தாக்குதல்கள் சில படுகொலைகள் என்பன அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சுனாமி பெரும் மனித அவலத்தை தந்துவிட்டது. கட்டடங்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய, பெறுமதியான கட்டடங்களை யுத்தம் ஏற்கனவே அழித்துவிட்டது. அவ்வாறு அழிக்கப்பட்;ட கட்டடங்கள் கடைசிவரை முல்லைத்தீவில் எழவே இல்லை. அந்த வகையில் பார்த்தால் யுத்தம் ஏற்படுத்திய அழிவு எனபது பெரியது. ஆனால் சுனாமி யுத்தத்தின் பின்னர் உருவாகிக் கொணடிருந்த கட்டுமானங்கள் அனைத்தையும் மிச்சமில்லாமல் சிதைத்துக் கொண்டு போய்விட்டது. யுத்தம் செய்து மீட்ட முல்லைத்தீவை நாங்கள் பார்க்கின்றபொழுது எங்கள் பார்வை வித்தியாசமானதாக இருந்தது. பெரும் ஆக்கிரமிப்பை வென்ற நிலையில் பெரும் நகரத்தைக் கைப்பற்றிய வெற்றிக்களிப்பில் எங்களது பார்வையிருந்தது. இப்படி எல்லாம் அழிந்துவிட்டதே என்ற வேதனை இருந்தாலும் ஆக்கிரமிப்பை வென்றுவிட்டோம் என்ற நம்பிக்கையில் பார்த்ததால் இந்த அழிவுகள் எங்களைப் பாதிக்கவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் 'எங்களை மீறிய இயற்கையின் ஒரு பெரும் சக்தி இப்படியான அழிவைச்செய்துவிட்டது" என்பது ஒரு சோகமான நிகழ்வு. யுத்தத்தைவிட சுனாமி தான் பெரும் அழிவு உணர்வைத் தந்தது. யுத்தத்தை நாங்கள் வெற்றியோடு பார்க்கின்றதன் காரணத்தால் அழிவுகள் எங்களை தாக்குவதில்;லை.. இருப்பினும் முல்லைத்தீவில் யுத்தம் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அதில் முல்லைத்தீவை முழுமையாக இழந்திருந்தோம். அப்படி இழந்தவற்றை நாங்கள் மீண்டும் முழுமையாக உருவாக்கிக் கொள்ளவில்லை. யுத்தம் சிதைத்தவற்றின் எஞ்சியவற்றை சுனாமி சிதைத்துக்கொண்டு போய்விட்டது. சுனாமி பற்றிய முன்னனுபவம் அது பற்றிய அறிவி;ல்லாத தன்மைதான் அதிக இழப்புக்களிற்கு காரணமாக இருந்தது. இத்தகைய தாக்கத்தில் சிக்கிய மக்கள் மீண்டும் கடலோடு இணைவார்களா? கடற்தொழில் வாழ்க்கைக்குள் உடனடியாக வந்து பொருந்துவார்களா? என்பது உடனடியாக அச்சமாகத்தான் இருந்தது ஆனால் நான் அச்சப்பட்டதைவிட மக்கள் விரைவாக மீண்டும் கடலோடு பொருந்திவிட்டார்கள். சுனாமி அலைகள் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தை, அதனால் எழுந்த நெருக்கடிகளை இயக்கம் எப்படி வெற்றிகொண்டது? என்ற கேள்வியை சர்வதேச மட்டத்தில் நிலமைகளை அவதானித்தவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டிருந்தார்கள். யாழ். குடாவில் இருந்து ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து ஒரு இரவில் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அப்படி வெளியேறிய மக்களை நாங்கள் எந்தச் சுகாதாரப் பிரச்சினையோ, பட்டினிச்சாவோ ஏற்படாமல் கையாண்ட அனுபவம் எங்களது இயக்கத்திற்கு இருக்கிறது என அவர்களுக்குப் பதிலளித்திருந்தேன். நாம் போரை தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருந்த காரணத்தால் எங்களது நிவாரண நடவடிக்கைகளும் மீட்பு நடவடிக்கைகளும் அந்தளவு துரிதகதியில் நடைபெற்றன. இந்தளவு துரிதமான செயற்பாட்டுக்கு காரணம் முழுக்க முழுக்க நீண்டகாலப் போர் அனுபவம் கற்றுத்தந்த பாடம்தான் நெருக்கடியான நிலைமைகளை அச்சமில்லாமலும் பதற்றமில்லாமலும் அதிர்ச்சியடையாமலும் எதிர்கொள்கின்ற தன்மையை எங்களது போராளிகளும் சரி காவல்துறையினரும் சரி ஏன் எங்களது மக்களும் சரிபெற்றிருந்தார்கள். இது நிலமையைச் சீராக்குவதற்கு பெரிதும் கைகொடுத்தது. சுனாமி பற்றிய செய்தியைக் கூறுவதற்காக தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்த வேளையில் தலைவர் எல்லா விடயங்களையும் அறிந்திருந்தது. மட்டுமல்லாமல் இயக்கத்தின் அனைத்துத்துறையினருக்கும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்குரிய ஆலோசனைகளைக் கூறிக்கொண்டிருந்தார். இயக்கத்தின் வளங்கள் அனைத்தையும் மீட்பு நடவடிக்கைகளில் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்கான உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்ததார். அத்துடன் தனது மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்த போராளிகளிலிருந்தும் கூட மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆளணிகளை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். இப்பேரவலம் மக்களுக்கு உளவியல் தாக்கத்தினை ஏற்படுத்திவிடாமல் இருக்கத்தக்க வகையில் மக்களைக் கடலோடு தொடர்ந்து தொடர்புடன் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தைத் தமிழீழக் கடற்படையின் பொறுப்பாளர்களுக்கும் அரசியல்துறையினருக்கும் கூறிக் கொண்டிருந்ததினையும் மருத்துவ நடவடிக்கைகளில் இயக்கத்தின் மருத்துவப் பிரிவு முழுமையாக ஈடுபடுவதற்குரிய உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்ததையும் கண்டேன். உண்மையில் சுனாமி பற்றி நாங்கள் தலைவருக்கு சொல்வதற்கு ஏதுமில்லாமல் தலைவர் எல்லா விடயங்களையும் முன்னரே உணர்ந்து அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டிருந்ததையே காணக்கூடியதாக இருந்தது என சுனாமி அலைகள் ஏற்படுத்தியிருந்த விளைவுகள்; பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்;தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் புல னாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள். Eelanaatham
|