|
இவ்வேளையில் மன்னார் மடுவில் உள்ள பண்ணை முகாமொன்றில் தேசியத் தலைவர் அவர்கள் இருக்கின்றார் என்ற தகவல் பஸ்தியாம்பிள்ளைக்கு கிடைத்தது. உடனடியாக பஸ்தியாம்பிள்ளை மற்றய பொலிஸ் அதிகாரிகளுடன் ஜீப்பில் பறந்தார். முகாம் பொலிஸ்படையால் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு இருந்த போராளிகளுள் இயக்க மூத்த உறுப்பினரான கள்ளியங்காட்டைச் சேர்ந்த செல்லக்கிளியம்மானால் பஸ்தியாம்பிள்ளையும் மற்றய பொலிஸ் அதிகாரிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன் பஸ்தியாம்பிள்ளையின் புலனாய்வு நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வீழ்ந்தது. பஸ்தியாம்பிள்ளையின் சாவு ஜே. ஆர் அரசுக்கு பெரும் அதிர்ச்சியும் பின்னடைவும் ஏற்படுத்தியது.
மேலும் இன்னொரு அரசபடையின் தமிழ் புலனாய்வாளர் உரும்பிராயில் வைத்து தேசியத்தலைவரால் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து இச்சம்பவங்கள் வடபகுதியிலிருந்து கிழக்குவரை தொடர்ந்தது. அரச புலனாய்வாளர்களின் இழப்பு தொடர்ந்தது. இதனால் இலங்கையரசின் C.I.D என்ற பெயருடன் இயங்கிய புலனாய்வுத்துறை மேலதிக நடவடிக்கைக்காக N.I.B என்று மாற்றி விஸ்தரிக்கப்பட்டது. அதாவது இராணுவ புலனாய்வுத்துறை, பொலிஸ் புலனாய்வுத்துறை C.S.U, விமானப்படைப் புலனாய்வுத்துறை, கடற்படைப் புலனாய்வுத்துறை என்று தனித்தனியே புலனாய்வுக்கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு செயல்வடிவமும் கொடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் புலனாய்வுத்துறைக்கு 1984, 1986 காலப்பகுதிகளில் பல பொலிஸ் புலனாய்வாளர்கள் வேலைசெய்தனர். அவர்களுள் சிலர் தமிழர்கள். பொலிஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக தியோப்பிளஸ், சார்ஜன் சந்திரக்குட்டி மற்றும் சிங்களவரான இராணுவப் புலனாய்வைத்துறையைச் சேர்ந்த பியசேன, எக்கநாயக்க போன்றோரும் அடங்குவர். இதில் தியோப்பிளஸ் தமிழராக இருந்துகொண்டே பல அப்பாவித் தமிழர்களைக் கைதுசெய்து சித்திரவதைக்கு உட்படுத்திக் கொன்றதுமட்டுமல்ல, ப+சா, வெலிக்கடைச் சிறைச்சாலைகளுக்கு தமிழர்களை அனுப்பியும் வைத்தவர். பின்னர் போதைப்பொருள் தடுப்புப்பிரிவுக்கு பொறுப்பாக கொழும்பில் கடமையாற்றும்போது சுட்டுக்கொல்லப்பட்டவர். இதில் சார்ஜன் சந்திரக்குட்டி கொழும்பில் மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு பின்னர் இறந்ததாக சொல்லப்படுகின்றது. தகவலின் உண்மை நிலை தெரியாது. இவர்கள் கிழக்கில் புலனாய்வுவேலை செய்யும் வேளையில் பல தமிழ், முஸ்லீம் மக்களையும் அரச அதிகாரிகளையும் புலனாய்வுப்பணிக்கு இரகசியமாக அமர்த்தியிருந்தார். அதில் சிலர் தற்போதும் இலைமறையாகவேயுள்ளனர். அதில் அரச அதிகாரிகளாக இருப்பவர்கள்தான் அதிகமானோர். இவர்கள் N.I.B முகவராகவே இருந்து தொடர்ந்து எமது விடுதலைப்போராட்டத்திற்கு துரோகமிழைத்துவருகின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மூதூர், மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா என கொழும்புவரை நீண்டு தற்போதும் வெளிநாடுகளிலும் அதே வேலை செய்கின்றனர். மேலும் தன் தந்தையின் ஆலோசனைக்கு அமைய ஜே. ஆர் ஜெயவர்த்தனாவின் மகனான ரவி ஜெயவர்த்தனாவினால் தமிழரின் போராட்டத்தை சீரழிக்க உருவாக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினருக்கு இஸ்ரேல் அரசு இராணுவப்பயிற்சியை வழங்கியது. இவ் அதிரடிப்படையானது பொலிஸ்பிரிவில் முக்கிய அதிகாரிகளை உள்ளடக்கியதாகவே இருந்தது. இதற்கு இஸ்ரேலின் புலனாய்வுத்துறையான மொசாட்டின் ஆலோசனைக்கமைய பயிற்சியும் புலனாய்வுக்கல்வியும் புகட்டப்பட்டன. இந்த அதிரடிப்படையானது தங்களுக்கு என்ற புலனாய்வுத்துறையையும் ஏற்படுத்திக்கொண்டது. இது முற்றுமுழுதாக மொசாட்டின் மூளைச்சலவையுடன்தான் ஏற்படுத்தப்பட்டது. இந்த விசேட அதிரடிப்படையானது ஆரம்பகாலத்திலேயே 1985ம் ஆண்டு காலப்பகுதிகளிலேயே மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகளையும் அப்பாவி மக்களையும் ஏன் விடுதலைப்போராட்ட இளைஞர், யுவதிகளும்கூட கொல்லப்பட்டனர். மேலும் விசேட அதிரடிப்படையான S.T.F இனரின் புலனாய்வுத்துறையானது பல தமிழ், முஸ்லீம் நபர்களை தங்களுக்கு முகவராக நியமித்தனர். போராட்ட இளைஞர்களின் தகவல்களை சேகரித்தல் போன்றவையாகவேயிருந்தது. இதனால் பல வெற்றியும் கண்டனர். இந்த S.T.F புலனாய்வுத்துறையினரின் அணுகுமுறை வித்தியாசமானதாகயிருக்கும். அதாவது S.T.F இனருக்கு இரகசியத் தொடர்புகள் வைத்திருந்து தகவல் கொடுப்போர் தவிர மற்றய உளவாளிகள் சாதாரண உடையில் உள்ள போராளிகள் அல்லது போராளிகளின் ஆதரவாளர்களை தெரிந்தவர்கள் போல இல்லையேல் ஏற்கனவே அறிமுகமாகயிருப்பின் சந்தித்துக் கதைப்பர். இதை சாதாரண உடையில் மறைந்திருக்கும் ளுவுகு இனர் மறைத்துவைத்திருக்கும் தங்கள் துப்பாக்கியுடன் அந்த நபரை சுற்றிவழைத்து கைது செய்வர் அல்லது சுட்டுக்கொல்வர். ((தொடரும்...) சீனு
|