|
பெட்ரோலிய விலை அதிகரிப்பை தடுக்க பிரௌன் முயற்சி |
|
|
|
Tuesday, 13 September 2005 |
|
பெட்ரோலிய எண்ணெய் விலையைக் குறைக்கும் நோக்குடன், உலகின் முப்பதுக்கும் மேற்பட்ட நிதி அமைச்சர்கள் மற்றும் முக்கிய பொருளாதாரங்களின் பிரதிநிதிகளுடன் தாம் தொடர்பில் இருந்து வருவதாக, பிரிட்டிஷ் நிதி அமைச்சர் கோர்டான் பிரௌன் கூறுகிறார்.
தற்போது, பெட்ரோலியத் தேவை, உற்பத்தியை விட அதிகமாகி வருகிறது, எனவே, பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். பெட்ரோலிய எண்ணெய் விலை ஏற்றத்தை அடுத்து ஐரோப்பிய நாடுகளின் அரசுகள், பெரிதும் கவலை அடைந்துள்ளன என்கிறார்கள் நிருபர்கள். இங்கே பிரிட்டனில் பெட்ரோல் விலையேற்றத்தை எதிர்த்துப் போராட்டம் வந்தால் தட்டுப்பாடும் வருமோ என்ற அச்சங்கொண்ட வாகன ஓட்டுநர்கள் சிலர், தம் வாகனங்களுக்கு பெட்ரோல் அதிகம் போட்டதை அடுத்து, சில பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டது. BBC
|