பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow நீதி நேர்மையான தேர்தலுக்கான வழி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

நீதி நேர்மையான தேர்தலுக்கான வழி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 04 November 2005

தேர்தல் நெருங்க நெருங்க நாட்டில் வன்முறைகள், படுகொலைகள் என்பன அதிகரிக்கலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதுவரை பாரிய தேர்தல் வன்முறைகள் எதுவும் இடம்பெறாத போதிலும், அரசியல்வாதிகள் அதற்குத் தூபமிட்டு விடுவார்களோ என்பதே மக்களின் அச்சத்துக்குப் பிரதான காரணமாகும்.

வடக்கு கிழக்கைப் பொறுத்தமட்டில் தேர்தல் வன்முறைகள் என பெரிதாக ஏற்படுவதற்கான சாத்தியமில்லாத போதிலும் எங்கே பழி தீர்க்கும் படலம் தொடரலாம் என்ற அச்சமும் இல்லாமலில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் படுகொலைகள் தொடர் கதையாகவே இருக்கின்றன.

இதேவேளை, தேர்தல் தினத்தன்று ஏழு மாவட்டங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்று "பவ்ரல்' எனப்படும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் அமைப்பு கூறியுள்ளது.

புத்தளம், மாத்தறை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், கம்பஹா, குருணாகல் மற்றும் கண்டி ஆகிய இடங்களிலேயே வன்முறைகள் அதிகரிக்கலாம் என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான "பவ்ரல்' கூறியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் படுகொலைகளுக்கோ, வன்முறைகளுக்கோ, குறைவற்ற வகையிலேயே அவை நாளாந்தம் தொடர்ந்து வருகின்றன. எனவே, இவற்றில் இருந்தும் மீட்சி பெற வேண்டுமானால் நாட்டில் குற்றச் செயல்களைத் தூண்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடித்து நீதியின் முன் நிறுத்தவும் நடவடிக்கை எடுப்பது மிகவும் இன்றியமையாதது.இதேவேளை, நீதியான, நேர்மையான தேர்தல் இடம்பெற வேண்டும் என்றும் அதனை தேர்தல் கண்காணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றுமே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச நாடுகளும் இலங்கையில் நீதியானதும், நேர்மையானதுமான தேர்தலே நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கின்றன. அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ள "பவ்ரல்' மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்பவற்றுக்கு 10.85 மில்லியன் ரூபாவினை ஜப்பான் வழங்கியுள்ளது.நீதி, நியாயமான தேர்தலை உறுதி செய்ய தேர்தல் கண்காணிப்பாளர்கள் காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.வெறுமனே நான்கு இடங்களைக் கூறி, அதில் வடக்கு கிழக்கை முதல் நிலைப்படுத்தி அங்கு சிறந்த முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்று கூறுவதும், அதனை சில பேரினவாத ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுமே இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் கண்ட மிச்ச சொச்சங்களாகவுள்ளன.இலங்கையில் இனப்பிரச்சினையைக் காரணம் காட்டி எவ்வாறு வெளிநாட்டு உதவி கோரப்படுகின்றதோ, அதேபோன்றே தேர்தலையும், வன்முறைகளையும் காட்டி நிதி தேடும் நடவடிக்கைகளும் தொடருகின்றன.

இதனால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிட்டியதாக இல்லை என்றே அனைவரும் கூறுகின்றனர்.

இதே÷வளை, ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பன்று வடக்கு கிழக்கில் பாரிய வன்முறைகள் ஏற்படக் கூடுமோ என்ற கவலை தனக்கு எழுந்துள்ளதாக ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜோன் குஷ்னஹன் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் தேர்தல் பிரசாரங்கள் பெரிதாக முன்னெடுக்கப்படாத நிலையில் அங்கு தேர்தல்கள் எந்தளவில் "சூடு' பிடிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதேவேளை, ""ஐரோப்பிய ஒன்றியம் எம் மீது பயணத் தடையினை விதித்திருந்த பேõதிலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தமது கடமைகளை செய்வதற்கு நாம் ஒரு போதும் தடை விதிக்க மாட்டோம்'' என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். எனவே, ஐரோப்பிய ஒன்றியம் அந்தளவு தூரம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று புலனாகின்றது.

தேர்தலுக்கு முன்னரே ஊகங்களின் அடிப்படையில் அறிக்கை தயாரித்தும், வீணான அச்சங்களை வெளியிட்டும் மக்களை மேலும் குழப்பங்களுக்கு ஆளாக்க õமல் சகல தரப்பினரும் நீதி, நேர்மையான தேர்தலுக்கு வழி செய்வது இன்றியமையாதது.


virakesari
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..