பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow விஜயகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

விஜயகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 14 September 2005
மாநாடு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநாட்டில் ரசிகர்கள் டோக்கன் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மாநாட்டு மேடையில் காமராஜர், அண்ணா, விஜயகாந்த் படங்கள் காணப்பட்டது. மேடைக்கு காந்தி- காமராஜர் பெயர் சு10ட்டப்பட்டு இருந்தது. மேடையின் ஓரத்தில் விஜயகாந்த் கும்பிட்டபடியும், இடது ஓரத்தில் கட்டை விரலை உயர்த்தி சவால் விடுவது போன்ற படங்கள் இருந்தது. மாநாட்டில் பேசிய கட்சியின் நிர்வாகிகள் விஜயகாந்தை இதய தெய்வமே, வருங்கால முதல்வர், வாஞ்சி நாதன், கரிபால்டி என அழைத்தனர். அவ்வாறு அழைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.
        மாநாட்டு முதல் வரிசையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் உறவினர்கள் அமர்ந்து இருந்தனர். பெங்களூரில் இருந்து வந்த சித்தர் யோகி சக்தி பாபாஜி சுவாமிகள் முன் வரிசையில் அமர்ந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். மாநாடு தொடங்கியதில் இருந்து ரசிகர்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டார். மேடையில் இருந்தபடி நிர்வாகிகளை உடனுக்குடன் அனுப்பி தொண்டர்களை ஒழுங்கு படுத்தினார்.  மேடையில் விஜயகாந்தை தவிர திரை உலகை சேர்ந்த சிம்மாசனம் பட இயக்குனர் திருப்பூர் ஈஸ்வரன், துணை நடிகரும், விஜயகாந்தின் மெய்க்காப்பாளருமான விஜய் ஈஸ்வரன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். மாநாடு நிகழ்ச்சிகள் கிரேன் காமிராக்கள் மூலம் படமாக்கப்பட்டு டிஜிட்டல் திரையில் ஒளி பரப்பப்பட்டது.
      மாநாடு தொடங்கும் முன்பு மேடை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பகுதியில் பாதுகாப்பு பணியில் தொண்டர் படையினர் ஈடுபட்டனர். ஆனால் மாநாடு தொடங்கியதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை கவனித்தனர். மாநாடு தொடக்கத்தின் போது ஏராளமான ரசிகர்கள் அமருவதற்காக நாற்காலியை நோக்கி வந்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை தொண்டர் படையினர் அமைதிபடுத்தினர். விஜயகாந்தின் ராசி எண் மேடையிலும் பிரதி பலித்தது. அதாவது மேடையில் முதல் வரிசையில் 5 நாற்காலிகள் மட்டும் போடப்பட்டு இருந்தது. அதில் விஜயகாந்த், நிர்வாகிகள், ராமு வசந்தன், சுந்தர்ராஜன், ரவீந்திரன், விஜய் ஈஸ்வரன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். மேடையில் கருப்பு சீருடை அணிந்த தொண்டர் படையினரும், மாநாட்டு மைதானத்தில் சிகப்பு சீருடை அணிந்த தொண்டர் படையினரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
       மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டமாக வந்திருந்தனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து மாநாட்டில் கலந்து கொண்டனர். விழா மேடையில் கட்சி பத்திரிகையாக அன்பு விஜயகாந்த் என்ற பத்திரிகை அறிவிக்கப்பட்டது. அதன் முதல் பிரதியை விஜயகாந்த் வெளியிட்டார். மாநாட்டு மேடையில் விஜயகாந்த் கட்சி பெயரை அறிவித்ததும் அதிர் வேட்டுகள் முழங்கின. ரசிகர்களின் கரவொலிகளும் விண்ணை பிளந்தன. மாநாட்டு பந்தலில் ரசிகர்கள் அமருவதற்காக பிளாஸ்டிக் தரை விரிப்புகள் தரையில் விரிக்கப்பட்டு இருந்தது. மன்றத்தின் கொடியே கட்சிக் கொடியாக மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது. கட்சி பெயரை அறிவித்ததும் விஜயகாந்துக்கு ரசிகர்கள் தங்க கிரீடம் சு10ட்டினர். அதோடு வெள்ளி செங்கோலையும், விஜயகாந்துக்கு வழங்கினார்கள். கட்சி தொடங்கிய சில நிமிடத்தில் சென்னை மாவட்டம் சார்பில் கட்சி நிதியாக ரூ.50 ஆயிரம் மாநாட்டு மேடையில் வழங்கப்பட்டது. மாநாட்டு வளாகத்தில் ரசிகர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. குடிநீர் வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் மாநாட்டில் செய்யப்பட்டு இருந்தது. விஜயகாந்த் படம் வரைந்த கைக்குட்டைகள், கீ செயின்கள், படம் பொறித்த பேனாக்கள் விற்பனை செய்யப்பட்டது. அதனை மன்றத்தினர் ஆர்வமுடன் வாங்கினார்கள்.
தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் என்று பெயர் வைத்தது ஏன் விஜயகாந்த் விளக்கம் !

       தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் என்று பெயர் வைத்தது ஏன்ப என்பது பற்றி விஜயகாந்த் மாநாட்டில் கூறியதாவது இந்திய திருநாட்டில் திராவிட மொழியில் பேசுகின்ற மாநிலங்கள் அதிகமாக உள்ளது. எனவே தேசியத்தில் ஹதிராவிடம் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் ஹதேசியத்தை' கட்சியின் பெயரில் சேர்த்தேன்.  அதில் இடம் பெற்று இருக்கும் ஹமுற்போக்கு' என்ற வார்த்தைக்கு ரசிகர்கள் மத்தியில் பின்தங்கிய எண்ணங்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவும், இந்த இயக்கத்தை அவர்கள் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவும் ஹமுற்போக்கு' என்ற வார்த்தையும் இதில் சேர்க்கப்பட்டது. இன்று மாலையில் நடக்கும் கூட்டத்தில் நான் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசுவேன் என்றார்.

Indian
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..