பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow மட்டக்களப்பின் தற்போதைய நிலவரம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மட்டக்களப்பின் தற்போதைய நிலவரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 14 November 2005
தமிழ் மீடியாவுக்காக மட்டக்களப்பில் இருந்து சு.குணலிங்கம்
கடந்த வருடம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதிப்புக்குள்ளாக்கியது. அதிலும் வடகிழக்கின் கரையோரப் பிரதேசம் மிகவும் படுமோசமாக அழிவுகளை எதிர் நோக்கியது. என்பது யாவரும் அறிந்த விடயம்.
அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் வாகரை தொடக்கம் துரைநீலாவனை வரையிலான கரையோரப் பிரதேசம் தற்போதும் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிப்புக்களை எதிர் நோக்கிய மக்களை அரசஇ அரச சார்பற்ற பல நிறுவனங்கள் புனருத்தான பணிகளை ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
கரையோரப் பிரதேசம் மாத்திரம் நேரடியாக பாதிப்புக்களை எதிர் நோக்கினாலும் மறைமுகமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடயம் பாவட்டத்தின் அரசாங்கள் அதிபர் உட்பட பிரதேச செயலாளர்கள் பலரும் அறிந்ததொன்று. இவை தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு சில மறைமுகமாக பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளுக்கு நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
அதே வேளையில் நிவாரணப்பணிகள் சரியான நேர்த்தியான முறையில் வழங்கப்படவில்லை. அதே சமயம் சில அதிகாரிகள் முறைகேடாகவும் பல மோசடிகளை மேற்கொண்டுள்ளார்கள். இதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் பல தடவைகள் சாலைப் போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் முறையீட்டும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கமாக உள்ளது. இவ்வாறான விடயம் ஒன்று.வாசர்கள் அறிந்து கொள்வதற்கு.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பழம் பெரும் கிராமம் செட்டியார் குடியிருப்பு இந்த கிராமம் நேரடியாக சுனாமி பாதிப்புக்ககுள்ளாகாது விட்டர்லும் இங்கு வாழ்பவர்களின் 90மூ மானவர்கள் ஆற்று தொழிலை மேற்கொள்பவர்கள். இவர்களின் பெரும்பாலானோர் எழுத்தறிவு மிகவும் குறைந்தவர்கள் அத்துடன் மிக மிக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களே உள்ளார்கள்.
 
 1990ம் ஆண்டு ஏற்பட்ட கோர யுத்தமானது இக்கிராமத்தின் வாழும் மக்களின் பல உயிர்களை காவு கொண்டது. இவ்வாறு பாதிக்கப்பட்டது என்று சிறிலங்கா அரசினால் எந்த அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. என இக்கிராம் மக்கள் கூறும் போது மிகவும் வேதனைதருகின்றது. இது தொடர்பாக இக்கிராம் மக்களை நேரடியாக சந்தித்தேன். ஒரு கிராம் வாசி பின்வருமாறு தெரிவிக்கின்றார்.
 
 க.கோமேலஸ்வரி தெரிவிக்கையில் நான் திருமணம் செய்து 1990ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் கணவரை கைது செய்து கொண்டுவிட்டார்கள். எனக்கு மூன்று பிள்ளைகள் இரண்டு ஆண்ணும் ஒரு பெண்ணும் இவர்களின் தந்தையார் கைது செய்யப்படும் போது சிறு வயதாகவே உள்ளது. தற்போது மூத்த மகள் திருமணம் செய்து ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் திருமணம் செய்யும் வரையும் நானே பராமரித்தேன்.
 
 இத்தனைக்கும் எனக்கு நிரந்தர தொழில் எதுவும் இல்லை விறகு விற்பது மற்றும் ஆற்றில் இறால் பிடிப்பது போன்ற தொழில்களை செய்தேன் (தற்போதும் செய்கின்றேன் ) யாருடைய உதவிகளும் இன்றி பிள்ளைகளை வளர்த்தேன் இந்த வேளையில் ஒரு வேளை அல்லது இரு வேளை பட்டினியிலும் வாடி உயிர் வாழ்கின்றோம் எமக்கு உதவி; செய்ய யாரும் முன்வரவில்லை என்றே கூற வேண்டும்.
 
கடந்த வருடம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தமானது நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமான தொழில் பாதிப்பு ஏற்பட்டது ஆனால் எந்த விதமான உதவிகளும் கிடைக்கவில்லை. சுனாமி பாதிக்கப்பட்டு மூனறு நாள் பின்பு பழைய உடுப்பு புதிய உடுப்பு என வழங்கினார்கள் அதில் ஒன்று கூட எனக்கு கிடைக்கவில்லை. அன்றாடம் வாழ்க்கை நடாத்துவதே பெரும் பாடாகவுள்ளது. எம்மை போன்றவர்களுக்கு உதவி செய்வதற்கே அரச உத்தியோகஸ்;த்தர்கள் நியமிக்கப்பட்டவர்கள் எங்களை புறம் தள்ளியே வருகின்றார்கள்.
 
இதே போன்று இன்று பல அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை மேற்கொண்டுவருகின்றார்கள். இந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எங்கள் கிராமம் தென்பட வில்லையா அல்லது அரச அதிகாரிகள் வெளி காட்ட வில்லையா என்பது சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவானது கிராம சேவகரின் முறைகேடாகவும் பல ஊழல் செயல் முறையாகவும் மேற்கொண்டுவருகின்றார். இப்படிப்பட்ட அரச அதிகாரிகள் கடமையில் இருக்கும் வரையில் எமது அபிவிருத்தி குன்றிக் கொண்டே செல்லும் மாறாக அபிவிருத்தி; என்பதற்கு இடமே இல்லை.
 
அது மாத்திரமல்ல சுனாமி முத்திரைக்கு வழங்கப்படும் பணத்தில் பெறுமதிக்கு ஏற்ப தனக்கும் குறிப்பிட்ட அளவு வழங்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களை பணித்தும் வருகின்றார். என அவர் தெரிவித்தார்.
 
மற்றும் ஒருவர் இ.இராசலிங்கம் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார். நான் மீனவன் எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் தான் தொழில் செய்தேன் 90ம் ஆண்டு காலப்பகுதில் ஏற்பட்ட கடும் யுத்தத்தின் போது நான் ஆற்றில் தொழில் செய்து கொண்டுயிருந்த போது சிறிலங்கா இராணுவத்தினால் எனது இடது பக்க கையில் துப்பாக்கி சூடு காயம் ஏற்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் ஆனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து மீண்டும் எனது தொழிலை ஆரம்பித்த போது நான் புலிகளுக்கு ஆதரவு என கோரி இராணுவத்தினர் தொடர்ந்து சொந்தரவு செய்யதார்கள்.
 
மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்து அங்கும் மீன்பிடியிலேயே ஈடுபட்டு வந்தேன். சுனாமி ஏற்பட்ட பின்பு வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் நான் ஒரு மீனவன் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு தகுந்த ஆவணங்கள் இருந்த போது எனக்கான உதவிகள் எதுவுமில்லை ஏன் எமக்கு இந்த அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. என்பது தெரியவில்லை. மற்றைய இடங்களில் மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற போது ஏன் எமது கிராமத்தில் ஒரு சி;லர்க்கு வழங்கப்படுகின்ற போது ஏன் எமக்கு வழங்க கூடாது.
 
இவர்கள் வழங்குவது என்றால் மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் அனைவருக்கும் வழங்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் யாருக்கும் வழங்க கூடாது ஏன் இந்த அதிகாரிகளின் பாராபட்சம் என்பது தெரியவில்லை.. நாங்கள் பெரும் வறுமைக்; கோட்டின் கீழ் வாழுகின்றோம் எமக்கு என்று நிரந்த வீட்டுத்திட்டம் எதுவும் இல்லை இன்றைய நிலையில் இந்த தொண்டர் நிறுவனங்கள் ஒரே இடத்தில் வளங்களை குவிக்கின்றார்கள். எங்கள் கிராமம் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.
 
எமது கிராமத்தி;ல் முக்கியமான தேவையாக உள்ள விடயம் குடிநீர் மிக மிக தட்டுப்பாடான நிலையாகவே ஆரம்ப காலமிருந்து இன்றுவரைக்கும் உள்ளது. சுனாமி பாதிப்புக்கு பின்பு எத்தனையோ நிறுவனம் குடி நீர் வசதிகளை ஏற்படுத்திவருகின்றார்கள் அதி;ல் ஒரு நிறுவன் கூட எமது கிராமத்திற்கான குடிநீர் வசதிகளை மேற்கொள்ளவில்லை. இவற்றுக்கு முதல் படியான கிராம சேவகரின் முறைகேடான செயற்பாடே காரணமாகும்.. என அவர் தெரிவித்தார்.
 
மற்றுமொருவரான சி.கணேசன் தெரிவிக்கையில் எமது கிராம் வருடாந்தம் ஏற்படும் பருவ மழையின் போது எமது கிராம் தனியாக துண்டாகிவிடும் நகர் பகுதிக்கு செல்வது என்றால் படகுகள் மூலம் தான் செல்ல வேண்டிய நிலை இந்த காலங்களில் வெள்ள நிவாரணம் என்று எதனையும் தருவதில்லை. ஆனால் சொல்வார்கள் இந்த பிரதேச செயலகத்திற்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பகிரப்படும் என வாய் பேச்சியில் தான். ஓன்றுமே செயற்பாட்டில் இல்லை. நாங்கள் சிறியஇ கரையோர இறால் பிடித்தல் தூண்டல் போடுதல் என்பன நாம் மேற்கொள்ளும் தொழிலாக உள்ளது. அந்நிலையில் சுனாமி ஏற்பட்ட பின்பு பல நிறுவனங்கள் மீன்பிடி உபகரணங்களை வழங்கியுள்ளார்கள். இதிலும் ஒரு நிறுவனம் வழங்கிய பின்பு மற்றைய நிறுவனம் அதே பொருளை மீண்டும் வழங்குகின்றார்கள். மேலும் மேலும் ஒரு சிலர்க்கே வழங்குவதால் இந்த நிவாரணப் பொருள்கள் துஸ்ப்பிரயோகம் கூட இடம் பெறுகின்றது. ஏன் இவ்வாறு இடம் பெறவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
த.லீலவதி என்பவர் தெரிவிக்கையில் நாங்கள் இந்த கிராமத்தில் முன்னேற்றம் இன்றியே கிடுகளினால் கட்டிய வீடுகளிலேயே வாழ்கின்றோம் ஒவ்வொரு வருடமும் ஓலை மட்டை வாங்குவதற்கு பெரும் சிரமத்தினையே எதிர் நோக்குகின்றோம். ஏனக்கு ஆண் பிள்ளைகள் இருந்த போதிலும் அவர்களால் வெளியில் சென்று வேலை செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக தெரிவித்தார்.
 
எங்களை யாரும் கவனிப்பார் இன்றி புறம் தள்ளப்பட்ட நிலையில் காணப்படுகின்றோம் நீங்கள் எங்களை பார்த்த பின்பு தான இப்படியான ஊர் உள்ளது என்பது இனிமேல் வெளியிடங்களுக்கு தெரியும் என நான் நினைக்கின்றேன் அதுமட்டுமல்ல நாங்கள் இந்த கிராமத்தின் உண்மைகளை கூறினால் ஒர் சிலர் மிரட்டலும் அச்சுறுத்தலும் செய்கின்றார்கள் எங்களை யார் பாதுகாப்பார்கள் என வினா எழுப்பினார்.
 
இந்த கட்டுரையினை அனைவரும் நன்கு வாசிக்க வேண்டும் இதன் மூலம் எமது மாவட்டத்தின் ஆட்சி முறையினையும் அனைத்துலக மக்களும் மற்றும் இடம் பெயர்வு மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் நான் இந்த இடங்களுக்கு நேரடியாக சென்று இவர்களின் அவலங்களை நன்கு அறிந்து எழுதியுள்ளேன். இந்த எனது முயர்ச்சி வீணடையக் கூடாது.
 
தமிழ் பிரதேசத்தில் யுத்தம்; மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களை மீண்டும்  கட்டியெழுப்ப வேண்டுமானால் எமது குறைகளையும் அறிந்து கொள்ளுங்கள் பாதிக்கப்பட்டவர்கள் இதன் மூலம் பயனடைய வேண்டும்.
 
நன்றி.
இக்கட்டுரைபற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. கருத்துக்கள் அனைத்தும் இக் கட்டுரையின் உரிமையாளருக்கு நன்றியுடன் அனுப்பிவைக்கப்படும்

சு.குணலிங்கம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..