|
|
|
வாழைச்சேனையில் இருந்து நேரடி ரிப்போர்ட் - தமிழ் மீடியா |
|
|
|
Tuesday, 15 November 2005 |
சு.குணலிங்கம் (வாழைச்சேனை நிருபர்)  எத்தனை நிறுவனங்கள் வந்தலும் இலங்கையை பொறுத்தவரையி;ல் முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இவற்றுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. இருந்தாலும் நாட்டினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள். குறைவாக காணப்படும் வளங்களை கொண்டு நிறைவான விருத்தினை செய்ய முடியும் அது மாத்திரமல்ல திறமையாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். உலகமகா யுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பானில் அணு குண்டு போட்ட போது புல் கூட தளைக்காது என்று கூறிய நாடு இன்று உலக சந்தையில் ஜப்பானின் பொருள் தான் தரமான பொருள் என்று மக்கள் முண்டியடித்துக் கொண்டுள்ளார்கள். காரணம் கடின உழைப்புஇ வினைத்திறனுடன் செயலாற்றலஇ நாட்டின் வளத்தினை முழுமையாக பயன்படுத்தலஇ மற்றும் சுறுசுறுப்பு போன்றவையே இன்று எதிரி நாட்டுக்கு சமமாக போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இது போன்று பல நாடுகளை குறிப்பிடலாம் இருந்;தாலும் எனது தலைப்பின் கீழ் பார்ப்பது பொருத்தமற்றது.
ஆசிய நாடுகளில் இலங்கை அபிவிருத்தியடைந்:து வரும் சனத்தொகை அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று. இருந்தாலும் கல்வி சுகாதாரம் போன்றவற்றில் 90மூ க்கு மேல் அபிவிருத்தி கண்டுள்ளது. ஆனால் இன்னும் சனத்தொகை விருத்தியானது வெகுவிரைவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறான நிலையில் மக்களின் தேவைகளும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நாட்டினை பொறுத்தவரையில் 70மூ மானவர்கள் விவசாயமும் அதனுடன் சார்ந்த பயிர்களையும் செய்கின்றார்கள். மீதியில் 20மூ மானவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளாhகள். ஏனையோர் ஏனைய தொழில் புரிபவர்களாக காணப்படுகின்றார்கள். இந்த வகையில் மீன்பிடியில் ஈடுபட்டாலும் மேற்கேதேய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. கரையோரம் மீன்பிடித்தல் கரைவலை தூண்டல் இறால் பிடித்தல் சிறிய படகுகள் தோணிகள் மூலமான மீன்பிடி முறைகளே இங்கு காணப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையின் கரையோரம் முழுவதும் இத்தொழிலே மேற்கொண்டார்கள். எவராலும் எதிர் பார்க்க முடியாத அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கடல் பேரலையானது நாட்டின் கரையோரம் முழுவதையும் அழிவுக்குள்ளாக்கியது. இலங்கையை பொறுத்தவரையி;ல் தென்பகுதியினை விட அடுத்த படியாக வடகிழக்கினை குறிப்பிடலாம். அதிலும் கிழக்கினை பார்த்தால் அம்பாறை மாவட்டத்திற்கு அடுத்த இழப்பு மட்டக்களப்பு ஆகும். இவற்றில் வாகரை கல்குடா நாவலடி காத்தான்குடி போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லக் கூடியது. மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட் படுமோசமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று நாவலடி. இந்த கிராமத்தில் 1446 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் 942 பேர் காயமடைந்துள்ளார்கள் 98பேர் காணாமல் போய்யுள்ளார்கள் மற்றும் 13350 குடும்பங்கள் இடம் பெயர்ந்து 12 முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். இதே போன்று 2669வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன அத்துடன் 1358 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இன்றும் மீள் குடியேற்றம் செய்ய முடியாத நிலமை இங்கு உள்ளன காரணம் இப்பிரதேசமானது கடல் கரையை அண்மித்துள்ளமையால் செல்வதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ளதுடன் அரசினாலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது இவர்களில் 467 குடும்பங்கள் திராய்மடு கிராமத்தில் தற்காலிய வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான உதவிகளை தமிழர் புனர்வாழ்வு கழகம் அக்ஸன் பாம் மற்றும் சுவிஸ் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவற்றில் அக்ஸன் பாம் தண்ணீர் மற்றும் மலசல கூட வசதிகளை மேற்கொண்டுள்ளார்கள். தமிழர் புனர்வாழ்வு கழகம் தற்காலிய வீடுகளை அமைத்து கொடுத்துள்ளார்கள். இருந்தும் இப்பகுதிகளுக்கு சென்று கிராம வாசிகளின் குறைகளையும் அறிய தவறவில்லை அந்த வகையில் ஒருவர் பின்வருமாறு தெரிவிக்கின்றார். மு.கனகராசா என்பவர் தெரிவிக்கையில் எனது குடும்பத்தில் மனைவியை இழந்து நானும் இந்த சுனாமியால் பல இன்னலுக்கு மத்தில் நீரில் இருந்து தப்பியுள்ளேன். அதே போன்று எங்கள் கிராமத்தினை பொறுத்தவரையில் ஒரு குடும்பத்தில் ஒருவர் சரி இறக்காமல் அல்ல அப்படி கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆரம்பத்தில் ஆலயங்கள் பாடசாலைகள் பொதுகட்டடங்கள் உறவினர் வீடு என பல இடங்களில் தங்கி தற்போதைக்கு இந்த திராய்மடு கிராமத்தில் குடியேறியுள்ளோம். இருந்தும் எங்களை பொறுத்தவரையில் எவற்றுக்கும் ஆசை இல்லை.. காரணம் நாங்கள் மனைவி பிள்ளைகள் உறவினர்கள் என இழந்து மனம் வெறுத்த நிலையில் உள்ளது. எனினும் தற்போது பல நிறுவனங்கள் வருகின்றார்கள் பல பொருள்களை வழங்குகின்றார்கள் அதுவும் ஒரு சிலருக்கு கிடைக்க பலருக்கு கிடைக்காமலும் உள்ளது இவற்றுக்கு மேலாக வரவர்கள் போட்டேக்களை எடுக்கின்றார்கள் அதனை பத்திரிக்கையில் போடுகின்றார்கள் இந்த கிராமத்திற்கு உதவி செய்துள்ளோம் என விளம்பரம் மாத்திரம் தெளிவாக செய்கின்றார்கள். நாங்கள் இவர்களிடம் கூறுவது எவராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைக்க கூடியதாக செய்யுங்கள் என இவர்களை கேட்கின்றோம். எங்கள் கிராமத்தினை பொறுத்தவரையில் கனிசமானவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்பவர்கள். அழிவின் போது உபகரணங்கள் அனைத்தும் இழந்த நிலையில் தான் உள்ளோம். அத்துடன் மீனவர்கள் என்பதனை உறுதிபடுத்துவதற்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்களை வழங்காது மட்டக்களப்பிலுள்ள மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தாம் விரும்புவர்களுக்கும் அத்துடன் தமக்கு பணம் வழங்குபவர்களுக்கு மாத்திரமே வழங்குகின்றார்கள். இது தொடர்பாக அவர்களிடம் கேட்டால் உங்களுக்கு அனைத்தையும் தரமுடியாது. இவர்கள் கூறுவது ஒருவகையில் உண்மையாக இருந்தாலும் கூட உரியவர்களை அடையாளம் கண்டு பொருத்தமானவற்றை வழங்கினால் சரி ஆனால் நடப்பது என்ன நான் கடல் தொழில் செய்பவன் எனக்கு ஆற்று தொழிலுக்கான உபகரணங்களை வழங்கினால் என்ன செய்வது. இவ்வாறு மாறி; மாறி வழங்குவதால் நானும் பயனடையப் போவதில்லை மற்றவரும் எதனையும் செய் முடியாத நிலை தோன்றும் அல்லவா.. இவையனைத்தும் மீன்படி கூட்டுத்தாபனத்தில் உள்ள அதிகாரிகளின் முறைகேடான செயல் முறையே காரணம். இன்னும் ஒரு விடயத்தினை கூற வேண்டும் நாங்கள் இன்று அனைத்தையும் இழந்து தெருவில் நிற்கின்றோம் இந்த நிலையில் நிரந்தர வீடு வழங்குவது என்றால் உங்களுக்கான காணி உறுதியினை கொண்டுவாருங்கள் அப்போதுதான் வீட்டு திட்டத்தினை செய்வோம் என அரச அதிகாரிகள் எங்களிடம் தெரிவிக்கின்றார்கள் நாங்கள் எவ்வாறு இவற்றினை மேற்கொள்வது எல்லாவற்றையும் இழந்த நிலையில் உளரீதியாகவே பெரும் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ள நிலையில் இவ்வாறு கூறுவது எந்த வகையிலும் நியாயமில்லை. கடற்கரைக்கு அண்மையில் இருந்த எங்களை எத்தனையோ மைகளுக்கு அப்பால் குடியேற்றம் செய்துள்ளார்கள். இதனால் மேலும் பாதிப்புக்களே உள்ளன. அதுமாத்திரமல் சரியான மருத்துவ வசதிகளா அல்லது மாணவர்களின் கல்வி முன்னேற்றமா எல்லாமே; அரையும் குறையுமாகதான் உள்ளது நாங்கள் பாடசாலையில் தங்கியிருந்த போது தெரிவித்த விடயம் ஒன்றுமே சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றே கூறவேண்டும். மொத்தத்தில் பார்த்தால் எப்படியாவது பாடசாலையில் இருந்து எழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பது தற்போது புலனாகின்றது. என அவர் தெரிவித்தார். மற்றொருவர் தெரிவிக்கையில் சி.தனபாலன் நாங்கள் சொல்வது என்றால் குறையாகவே சொல்ல வேண்டும். அந்த குறைபாடுகளை விட்டவர்கள் அரச அதிகாரிகள் என்றுதான் கூற வேண்டும். இவற்றினை சொன்னால் நாங்கள் மிரட்டப்படுவதுடன் எங்களுக்கு வழங்கப்படும் உதவிகளையும் இடைநிறுத்தம் செய்து விடுவார்கள் அப்படியில்லாவிட்டாலும் பல கேள்விகளை கேட்டு சொந்தரவு செய்வார்கள். இது இன்றை நிலைவரம். எங்களுக்கு சகல வசதிகளுடன் கூடி மாதிரிக் கிராமம் ஒன்ற உருவாக்கி தருகின்றோம் என்றுதான் கூறினார்கள். ஆனால் தற்போதைக்கு தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் தற்காலிய வீடுகளே அமைத்து தந்துள்ளார்கள். தென்பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் நிரந்தர வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அழிவுற்ற வீதிகள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் பொது கட்டடங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மாதிரிகிராமங்கள் எத்;தனையோ இன்று நிறைவடைந்த நிலையில் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எனது வடகிழக்கு மாத்திரம் தான் இன்று சுனாமி ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடையும் நிலையில் இன்னும் தற்காலிய வீடுகளில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது மழைக்காலம் ஆரம்பிக்கப்பட்டு விட்டநிலையில் எங்கள் வீட்டியில் ஒரு அடிக்கு மேலாக வெள்ளம் பிடித்துள்ளது இவ்வாறான நிலையில் சிறு குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் எங்கு தங்கவைக்கப்படுவது அத்துடன் இவர்கள் சுகயீனமுற்றால் உடனடியாக சிகிச்சை பெற கூடிய அளவுக்கு நிலையுள்ளதா? பாருங்கள். அத்துடன் இந்த பிரதேசம் காடுகளை சுத்தம் செய்து தான் குடியேற்றம் செய்தவர்கள் சுற்றிவர காடுகள் உள்ளன மழையின் இங்குள்ள அனைத்து விசஜந்துக்களும் வீடுகளை நோக்கி வருகின்றது. மிகவும் முக்கியமாக இந்த காலகட்டத்தில் கொசுக்களின் சொல்லை தாங்கமுடியவில்லை. ஒரு வேளை உணவு உண்பது என்றால் இருவர் தேவைப்படுகின்றது. அக்ஸன் பாமினால் தண்ணீர் வசதியும் மலசலகூட வசதியும் நன்றாக செய்து தந்துள்ளார்கள் அத்துடன் ஏதும் சிதைவுகள் ஏற்பட்டால் மீள் பராமரிப்பு வேளைகளையும் செய்து கொடுக்கின்றார்கள். எந்த நிறுவனமாக இருந்தாலும் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு மக்கள் பயனடையக் கூடியவாறு இருந்தால் பாராட்டத்தக்கது. எனது பிரதேசங்களை பொறுத்தவரையி;ல் அரச சார்பற்ற நிறுவனங்கள் இல்லை என்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை கவலைக்கிடமாகத்தான் இருந்திருக்கும்..எனினும் நிறுவனங்கள் தேவையான அளவு பணத்தினை வழங்குகின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்தும் அரச அதிகாரிகள் நிறுவனங்ளின் பிரதிநிதிகள் ஆகியோர் நேர்த்தியான அபிவிருத்தி திட்டங்களை செய்கின்றார்களா? இத்தனைக்கும் மக்களுக்கான பணிகளை செய்வதற்காக சம்பளம் கொடுத்தாலும் பல்வேறு ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கையில் தான் ஈடுபடுகின்றார்கள். மக்களின் குறைபாடுகளில் என்தளவு நிறைவு உள்ளது என்பதனை அறிந்து கொள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ந.சிறிசங்கர் அவர்கள் தொடர்வு கொண்டு கேட்டபோது. உண்மையில் இப்பிரதேசம் பள்ளபகுதியாகும் எனினும் தற்போது கால்வாய்கள் வெட்டப்படுகின்றது மிக விரைவில் பூர்;த்தியாகிவிடும். இருந்தாலம் இக்கால பகுதியில் வீடுகளில் அதிகளவான் வெள்ளம் வருமானால் நாங்கள் தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தாயர்நிலையில் உள்ளதாக தெரிவித்தார் உறுதி தொடர்பாக விளக்கம் அளிக்கையில் எமது கருமங்களை இலகுபடுத்துவதற்காக நாங்கள் இவர்களுக்கு என உறுதியினை பெற்றுக்கொள்வதற்கு இலகுவான வழிகளையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்குவதில் பல குறைபாடுகள் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள் என கேட்ட கேள்விக்கு நாங்கள் ஆரம்பத்தில் இருந்து திட்டத்தின் கீழ் மக்களுக்கான நிவாரணங்களை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கிடைக்க கூடியதாகவே செய்துள்ளோம் ஆனால் சில நிறுவனங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தாது. தன்னிச்சையாக செயல்படுவதினால் இவ்வாறான பல குறைபாடுகள் இடம் பெறுகின்றன் இவற்றினையும் மக்கள் எங்களி;டத்தில் முறைப்பாடும் செய்கின்றார்கள். இவற்றி;ல் நாங்கள் தெரிந்து கொள்வது இந்த அரசாங்கத்தினால் எமது தாயக பிரதேசத்திற்கு என எவற்றையும் செய்யப்போவதும் இல்லை. அத்துடன் நாங்களாக எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய இடம் அளிக்க போவதுமில்லை. உதாரணமாக நிறுவனங்களால் வழங்கும் நிதிகளை சுதந்திரமாக பயன்படுத்த முடியாத அளவுக்கு பல்வேறு சட்டதிட்டங்களை கொண்டுவந்து இன்னும் காலதாமதம் ஏற்படுத்துவதாகவே அமைகின்றது. ஏவ்வாறு இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் பழைய நிலையை அடைய வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமே இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். அது மாத்திரமல்ல அழிவுற்றது தமிழ் பிரதேசம் என்பதனை ஒவ்வொரு மகனும் மனதில் கொள்வார்களாயின் அபிவிருத்தி என்பது பேச்சில் அல்ல செய்கையில் காட்ட முடியும். சு.குணலிங்கம்
|
|