பிரதான பக்கம் arrow ஏனையவை.. arrow சாவும் ஒரு வாழ்வே!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சாவும் ஒரு வாழ்வே! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 22 November 2005
ஏடா! தமிழ் வீரா! உனை
           எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
           வலியின் துணை யோடே!
நாடா பிணைக் காடா என
           நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
           புரிவாள் தமிழ் மொழியே!
குண்டாந்தடி கொண்டே அடி
           தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! எமை
           ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
           பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
           வேங்கை விடுவானோ?
 
'முத்தே! முழு நிலவே! விடை
           மொழிவாய்!' என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
           பதிலின் வெறி பெற்று...
'சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
           சொல்லே! உனக்காச்
செத்தே மடிகின்றேன்!' எனச்
           செல்வாய் தமிழ் ஏறே!
 
தங்கை சிறுதம்பி ஒரு
           தந்தை வயதன்னை
மங்கை இள மனையாள் புது
           மழலை முதலானோர்
என்கை தனிலுண்டே எனும்
           ஏக்கம் விடு தோழா!
சங்கை பெறப் போவார்பெறும்
           சாவும் ஒரு வாழ்வே!

காசி ஆனந்தன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..