பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இது சாபமா? எச்சரிக்கையா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 November 2005

மீண்டும் பண்டாரநாயக்கா யுகம் என்ற கோஷத்தோடு ஆட்சிக்கட்டில் ஏறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி பல்வேறு அவலங்க ளுக்கு வாய்ப்பளிக்கப் போகின்றது.
ஐம்பதுகளின் நடுப்பகுதியில் அமரர் பண்டாரநாயக்கா ஆட்சிக்கட்டில் ஏறுவதற்காக விதைத்த " சமூகப் புரட்சி' என்ற பெயரிலான பேரினவாதக் கிளர்ச்சி இப்போது மஹிந்த அரசுக்கட்டில் ஏறுவதுடன் மீண்டும் புனர்ஜென்மம் எடுத்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன் சுட்டிக்காட்டுவதுபோல பேரினவாதப் பூதத்தை, ஒற்றையாட்சி எதிர்ப்பு மூடத்தனத்தை, அடிப்படைவாத ஆதரவு நிலைப்பாட்டை,பௌத்த மதவாத மேலாதிக்கத்தை, சமாதானத் தீர்வுக்கு எதிரான பிற்போக்குத்தனத்தை, போருக்கு வாய்ப்பான சூழ்நிலையை திறந்து விட்டிருக்கிறது மஹிந்தவின் தேர்வு.
""பண்டாவின் அரசியல் வாரிசுகள் இன்று ஒன்றுசேர்ந்து செய்யப்போவது என்ன? மிகப்பெரிய அவலமாக மாறப் போகின்றது இத்தீவு. முரண்பாடுகள் எல்லாம்முற்றி, கூர் மையடைந்து போர் மீளவும் வெடிக்கின்ற போது இத்தீவில் இரத்த ஆறு ஓடப்போகிறது என்பது கண்ணுக்கு முன்னால் தென்படுகின்றது.
""இராணுவத்தின் ஊடுருவல்,ஆட்சிக்கவிழ்ப்பு, சதிப்புரட்சி என்று சிங்களதேசம் நாசமாகப் போகின்றது.'' இப்படி சாபமிடுபவர் போல எச்சரித்திருக்கின்றார் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன்.
இது வெறும் அரசியல் எதிரிக்கு அடக்குமுறையாளருக்கு எதிராக அடக்கப்படும் இனத்தைச் சார்ந்த ஒருவர் கொடுக் கின்ற அரசியல் சாபமல்ல. அல்லது எரிச்சலினால், வேத னையால் வந்த வசவோ, திட்டோ அல்ல. எதிர்காலத்தில் யதார்த்த பூர்வமாக நடக்கப் போகின்ற நிகழ்வுகளுக்கான கட்டியமாக எச்சரிக்கையாக கொள்ள வேண்டிய அம்சங்கள் இவை.
பொதுவாக பாகிஸ்தான்,மியன்மார் போன்ற ஓரிரு நாடுகளைத்தவிர ஏனைய தென்கிழக்காசிய தேசங்களில் ஆளும்கட்சித் தலைமைக்கோ,ஜனநாயக வழி தலைவர்களுக்கு எதிராகவோ இராணுவ ஊடுருவல்,ஆட்சிக் கவிழ்ப்பு, சதிப்புரட்சி என்பன இடம்பெறுவதில்லை.
ஏற்கனவே இலங்கையில்கூட 1971 இலும் பின்னர் 19881989களிலும் இதே போன்ற முயற்சியில் ஈடுபட்டு தனது கையைச் சுட்டுக்கொண்ட ஜே.வி.பியின் முன்னுதாரணம் இங்கு உண்டு.
அப்படியிருக்க,இதே விவகாரங்கள் இடம்பெறலாம் என்ற சாரப்பட புலிகளின் மூத்த தலைவர் வே.பாலகுமாரன் இப்போது கூறும் கருத்து எத்தனை தூரம் ஏற்புடையது என்ற கேள்வி எழுகின்றது. ஆனால், அவர் கூறியதுதான் யதார்த்த நிலை என்பது இலங்கையின் அரசியல் போக்கின் நகர்வுகளை நன்கு ஊன்றிக் கவனிக்கும் அவதானிகள் இலகுவாகப் புரிந்துகொள்வர்.
முன்னர்,இதேபோன்ற சதிப்புரட்சியில் ஈடுபட்டு,இப்போது தம்மை முழு ஜனநாயக வாதிகளாகக் காட்டிக்கொள்ளும் "உருத்திராட்சப் பூனை'களான ஜே.வி.பியினர் இப்போது ஆளும்தரப்புக்குள் முன்னெப்போதும் இல்லாதவாறு பல மடைந்திருக்கின்றார்கள்.
இந்த விவகாரம் குறித்து கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் இதே பத்தியில் சுட்டிக் காட்டியிருந்தோம். அதை மீண்டும் ஒரு தடவை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானது.
""கிழக்கு ஒட்டுப்படை விவகாரத்திலும் வினையை விதைத்து அறுக்க தயாராகிறது இலங்கை அரசு.
""கிழக்கில் பொலன்னறுவையை ஒட்டிய பிரதேசத்திலேயே கருணாகுழு என்ற பெயரில் ஒட்டுப்படைகள் இயங்குகின்றன. அரச புலனாய்வுத்துறைதான் இவற்றை இயக்குகின்றன என்பது பரகசியம். ஆனால் ,அவை புலனாய்வுத் துறையுடன் தமது தொடர்புகளை நிறுத்திக் கொள்ளவில்லை. அப்பிர தேசத்தில் நிலைகொண்டுள்ள ஏனைய படையினருடனும் ஜே.வி.பி. உறுப்பினர்களுடனும் இந்த ஒட்டுப்படைகள் தாராளமாகத் தொடர்புகளை வைத்திருக்கின்றன என்கின்றன உளவுத் தகவல்கள்.
""ஜே.வி.பியினர் வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக அரசியலுக்குத் திரும்பி விட்டார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் இவ்வாறு ஆயுத வழியைக் கைவிட்டு சுமார் ஒன்றரைத் தசாப்தங்களாகின்றன. ஜே.வி.பியில் ஆயுதப் பயிற்சிபெற்று, அவற்றை இயக்கக்கூடிய இளம் வயதில் எவரும் இப்போது இல்லை என்பது வாஸ்தவம்தான். ஆனால், ஆயுத வழியிலிருந்து ஜனநாயக அரசியல் வழிக்குத் திரும்பினார்கள் என்று கூறப்படும் ஜே.வி.பியினர் தம் மிடமிருந்த ஆயுதங்களை எந்தச் சமயத்திலும், அரசிடமோ அல்லது வேறு எவரிடமோ கையளித்தனர் என்பதற்குத் தகவல் ஆதாரம் ஏதும் இல்லை.
""ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சியுடன் இளை ஞர்கள் அவர்களிடம் இப்போது இல்லாவிட்டாலும் ஆயுதங்கள் இன்னும் அவர்கள் வசம் இருக்கின்றன என்பதுதான் கணிப்பு.
""இத்தகையோரும், இராணுவத்தினரின் ஒரு பிரிவினரும், கருணா குழு போன்ற ஒட்டுப்படைகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது விபரீதமான நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பதை தென்னிலங்கையில் பொறுப்புள்ள பலரும் உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.
""ஒட்டுப்படையை உருவாக்கப்போய், தென்னிலங்கையிலேயே ஓட்டை விழுந்துவிடும் ஆபத்து உருவாகி வருவதாக சம்பந்தப்பட்ட பலரும் பொறுப்புடன் கவலைப்படுகின்றனர்.
""அரசியல் தலைமைகளின் பொறுப்பற்ற போக்கு, புல னாய்வுப் பிரிவினரின் தீர்க்க தரிசனமற்ற குறுகிய நோக்கு டைய சதித் திட்டங்கள் போன்றவை பொலன்னறுவைப் பக்கத்திலிருந்து தெற்குக்கு பேராபத்தை ஏற்படுத்தப் போகின்றன என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். விதைத்த வினையை அறுக்கப் போகிறது தென்னிலங்கை.''
இப்படி நாம் இப்பத்தியில் குறிப்பிட்டோம். அதையே சற்று விளக்கமாக விஸ்தாரமாக குறிப்பிட முனைகிறார் போலும் பாலகுமாரன்.
இது தென்னிலங்கை அரசியல் தலைமைக்குப் புரிந்தால் சரி. 


uthayan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..