பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

டென்மார்க் செய்திகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 November 2005
Roj தொலைகாட்சி சேவையை டென்மார்க்கில் தடைசெய்ய வேண்டும் என துருக்கி நாட்டரசின் கோரிகையை அமெரிக்காவும் ஆதரித்து டென்மார்க் அரசிடம் இதுபற்றித் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கிநாட்டில் சிறுபான்மை மக்களின் மனித உரிமைகளை ஒடுக்கும் பல நிகழச்சிகளை அத் தொலைகாட்சி ஒளிபரப்பி வருகிறது. இது தொடர்பாக டென்மர்க்கில் அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்சை கிளப்பும் என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. டென்மார்க்கின் அரச தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
மேலதிக செய்திகள் உள்ளே..
    
தொலைக்காட்சி பார்ப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்து வருகின்றார்கள். தற்போது உள்ள சட்டப்படி தொலைகாட்சியைப் பாவித்து நிகழ்சிகளைப் பார்ப்பவர்கள் மட்டும் அனுமதிப்பத்திரக் கட்டணம் செலுத்த வேண்டும். கணினியைப்பாவித்து நிகழ்ச்சிகளைப் பார்ப்;பவர்கள் இக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் வருடத்துக்கு 2100குரோன்களை சேமிக்கலாம்.
 
ம்முறை நகரசபைத்தேர்தல்களில் 67 வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில் 50 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களில் 30பேர் துருக்கி நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள். இதில் இரண்டு தமிழர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
 
யர்தர பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் பாடசாலைக்கு வராத நாட்களில் பாடசாலையில் இருந்து பெற்றோர்களுக்கு SMS மூலம் தகவல் அனுப்பும் முறையை சுவீடனில் உள்ள உயர்கல்விப்பாடசாலைகள் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனை டென்மர்க்கில் செயற்படுத்த எடுத்த முயற்சிக்கு மாணவர்கள் எதிர்ப்பு கிளமபியுள்ளது. 
 
யர்கல்வியைப் பெறுவதில் பெண் பிள்ளைகள் மிகவும் ஆர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. உளவியலாளர், வைத்தியர், ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர், நீதித்துறை போன்ற கல்லிகளை கற்கும் ஆர்வத்தில் பெண்களே முதனமை வகிக்கிறார்கள். இதற்கு எதிர்மாறாக ஆண்கள் சிறுதொழில்கள், மேசன் வேலை மரவேலை, போன்ற வேலைகளை செய்யவே முயற்சிக்கிறார்கள். இதிலும் 9ம் வகுப்புடன் வேலை செய்ய ஆண்கள் ஆர்வமாக உள்ளனர். இது கல்விக்கு ஆலோசனை வழங்கும் பல்கலைக்கழக ஆய்வு நிலையத்தால் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..