|
அமெ.படைகள் வெளியேற கால எல்லை நிர்ணயிக்கப்படமாட்டாது வாஷிங்டனில் ஈராக் ஜனாதிபதி ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறுவதற்கான கால எல்லை தற்போதைக்கு நிர்ணயிக்கப்படமாட்டாது என ஈராக்கிய ஜனாதிபதி ஜலால் தலபானி , வாஷிங்டனில் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ள்யூ புஷ்ஷை அவர் சந்தித்தார், இச்சந்திப்பை அடுத்து , இவ்விருவரும், கூட்டுப் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தினர்.
இதில் ஈராக்கிய ஜனாதிபதி ஜலால் தலபானி பேசுகையில் அமெரிக்க துருப்புக்கள் வெளியேறுவதற்கான கால எல்லை நிர்ணயிக்கப்பட்டால் அது தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் ஒரு செயலாகவே அமைந்து விடும் என அச்சம் தெரிவித்தார். 2006 ஆம் வருட இறுதிக்குள் அமெரிக்க துருப்புக்களிடமிருந்து, ஈராக்கிய படைகளால் சில பொறுப்புக்களை கையேற்க முடியும். ஈராக்கிய படைகள் அதற்கான பக்குவத்தை அடைந்து வருகின்றன என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் பேசுகையில் அமெரிக்கா ஈராக்கிய மக்களுக்குப் பக்கபலமாக இருக்கும் , ஜனநாயக நடைமுறைகளை நோக்கி அவர்கள் முன்னேறி வருகிறார்கள் என பெருமிதம் தெரிவித்தார். ஈராக்கில் ஜனநாயக நடைமுறைகள் வேரூன்றுவதற்கு உறுதுணையாக அங்கு அமெரிக்கப் படைகள் செயல்படும். ஈராக்கியர் மேலெழும்பிறவிடுவர். அவர்களுக்கு அனுசரணையாக அமெரிக்கர் இருப்பர் என்றும் அவர் சொன்னார்.
kumaran
|