|
""நாடு இன்று ஒரு கொந்தளிப்பு நிலையில் உள்ளது. எந்த நேரமும் அது குமுறி வெடிக்கலாம். இந்த நிலை மையை விரைந்து நேர் சீர்செய்யவேண்டும்.பொதுமக்கள் மத்தியில் மனதில் ஒருவிதப் பீதி நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்கள் அச்சத்துடன் வாழ்கி றார்கள். எனவே, சமாதான நிலைமை பேணப்படுவதை விரைந்து உறுதிப்படுத்தவேண்டும்.'' இவ்வாறு கூறியிருக் கின்றார் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் ஐரின் சுபைடா கான் அம்மையார்.
இதையே நாமும் இப்பத்தியில் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். "நிழல் யுத்தம் நிஜயுத்தமாகின்றது' என நேற்று இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால், ஏற்பட்டுள்ள நிலைமையின் விபரீதத்தை சம்பந்தப்பட்டோர் இப்போதும் கூட உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை. இப்போதைய யுத்தநிறுத்தம், எப்போது முறியும், மீண் டும் தீவிரப் போர் எப்போது வெடிக்கும் என்று தெரியாத பதற்ற குழப்ப நிலையே நீடிக்கின்றது. இப்போது வடக்கு, கிழக் கில் இடம்பெறும் வன்முறைகள் தெற்கேயும் கூடத் திரும்ப லாம் என்ற அச்சமும் பல வட்டாரங்களில் நிலவுகின்றது. யுத்தநிறுத்தம் நின்று, நிலைத்து, நீடிப்பதாயின் அது தொடர்பான உடன்பாடு முழு அளவில் கடைபிடிக்கப்பட வேண்டும். அது கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதில் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும், அரசு புலிகள் இடையே அமைதி நடவடிக்கைகளுக்கு அனுரணைப் பணி வகிக்கும் நோர்வேக்கும் கணிசமான பொறுப்புண்டு. இவை இரண்டின் நிலைமையே இன்று சந்தேகத்துக்கு உரியதாக இருக்கும்போது அவற்றின் பங்களிப்புடன் நிலை நிறுத்தப்படவேண்டிய யுத்தநிறுத்தம் எப்படித் தாக்குப் பிடிக்கும் என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே. இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்றிருக்கிறார். அவரின் தலைமையின் கீழ் புதிய அரசு, புதிய அமைச் சரவை, புதிய அதிகாரவர்க்கம் என்று எல்லாம் புதியனவாகவே பொறுப்பேற்றிருக்கின்றன. ஏன், அரச சமாதானச் செயலகத்துக்குக் கூட புதியவரே பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் ஆதரவில் தங்கி, அதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றியின் வாயி லாகவே ஆட்சியைப் பிடித்திருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. இலங்கை இனப்பிரச்சினையில் அனுசரணைப் பணி வகிக்கும் பொறுப்பிலிருந்து நோர்வேயை விலக்கவேண்டும் என்ற முன் நிபந்தனையுடன்தான் இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து, அவரின் வெற்றிக்கு உதவியும் உறுதியும் அளித்தன இக்கட்சிகள். அப்படித் தெரிவாகி, ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, தமது புதிய ஆட்சியை அமைத்து விட்டார். அமைச்சர்கள், அதிகாரிகளை நியமித்துவிட்டார். பொறுப்புகளை உரியவர்களுக்கு பகிர்ந்தளித்து ஒப் படைத்துவிட்டார். ஆனால் அமைதி முயற்சிகள் தொடர்பாக ஒரு முக்கிய பணியை அவசரமாகவும், அவசியமாகவும் செய்யவேண் டிய வேலையை அவர் இன்னும் செய்யவே இல்லை. அந்த விடயத்தில் முடிவெடுப்பதை அந்தரத்தில் தொங்க விட்டு இழுத்தடிக்கின்றார் அவர். அது, புதிதாகப் பதவியேற்ற அவரது அரசு இனப்பிரச் சினைக்கான அமைதி முயற்சியில் நோர்வேயின் அனுசரணைப் பணி தொடர்வதை விரும்புகின்றதா, அது தொடரவேண்டுமா என்பதை அவர் இன்னும் தீர்மானிக்கவேயில்லை என்பதுதான். நோர்வேயில் புதிய அரசு பதவியேற்றவுடன், அந்த நாட்டின் அனுசரணைப் பணி இங்கு தொடரவேண்டும் என்று இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபா கரனும் புதிய நோர்வேப் பிரதமருக்கு செய்தி அனுப்பி யமை நினைவிருக்கலாம். அதுபோன்று இலங்கையிலும் புதிய அரசுத் தலைவரும் அவரது அரசும் பதவியேற்றவுடன் இது விடயத்தில் தமது நிலைப்பாட்டை நோர்வேக்கு உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தவேண்டும். தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். அதுவும் புதிய அரசுத் தலைவரின் கூட்டமைப்பில் உள்ள அவரது பிரதான சகாக்கள் நோர்வேயின் அனுசரணைப் பங்களிப்பு நிராகரிக்கப்படவேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்திவரும் நிலையில் தமது நிலைப்பாட்டை நோர்வேக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவேண்டிய புதிய ஜனாதிபதியின் கடப்பாடு இரட்டிப்பாகின்றது. ஆனால் இந்தப் பத்தி எழுதப்படும் இந்தச் சமயம் வரை அத்தகைய அனுசரணைப் பணியை வரவேற்கும் எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலையும் நோர்வே அரசுக்கு இலங்கையின் புதிய அரசுத் தலைவர் வழங்கினார் என்ற தக வலே இல்லை. ஆக, முன்னைய இலங்கை அரசின் கோரிக்கையின் கீழ் தான் எடுத்த பொறுப்பை இப்போதும் பெயருக்குத் தொடர் கின்றது நோர்வே. அவ்வளவே. எனவே, அமைதி நிலைமை பேணப்பட வேண்டும், யுத்தநிறுத்தம் ஒழுங்காகக் கடைப் பிடிக்கப்பட வேண்டும், இணக்கத் தீர்வுக்கான பேச்சுகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும், அரசியல் தீர்வு நல்லிணக் கத்துடன் காணப்படவேண்டும், இறுதி உடன்பாடு எட்டப் படவேண்டும் என்றெல்லாம் நல்ல நோக்கங்கள் இருக்குமானால் அவற்றையெல்லாம் அடைவதற்குத் தேவையான அவசியமான கட்டாயமான அனுசரணையாளர்களின் பங்கு, பணி, பொறுப்புக் குறித்து முதலில் தீர்மானிக்க வேண்டும். அது குறித்து இலங்கை அரசுத் தலைமை ஒரு முடிவு எடுக்காதவரை மற்றவை பற்றியெல்லாம் சிந்திப் பதில் அர்த்தமேயில்லை. uthayan
|