|
பாக்தாத் தொடர் குண்டு வெடிப்பில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் |
|
|
|
Wednesday, 14 September 2005 |
|
இராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் நூற்று ஐம்பதிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், குறைந்த பட்சம் இருநூறு பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பு நடைபெற்றதில் இருந்து பாக்தாத்தில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்களில் இன்றைய தாக்குதல்கள் அடங்கும்.
நகரில் பத்திற்கும் அதிகமான இடங்களில் குண்டுகள் வெடித்தன, அதில் நகரின் வடக்குப் புறத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாவட்டதில், வேலை தேடி வரிசையில் நின்றிருந்த தொழிலாளர்கள் இருந்த இடத்தில் குண்டுகள் அடங்கிய கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் குறைந்த பட்சம் 108 பேர் கொல்லப்பட்டனர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு கூச்சலும் குழப்பமும் நிலவியது. மருத்துவமனை வராந்தாக்களில் வைத்து காயமடைந்தோருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினர். அண்மையில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைக்கு பழி வாங்கும் விதமாக நாடு முழுவதுமான குண்டுத் தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதாக இராக் அல் கொய்தா என்று தன்னை அழைத்துக் கொல்லும் அமைப்பொன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியுள்ளது. bbc
|