பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மட்டக்களப்பு நிலவரம் கட்டுரை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 27 December 2005
மட்டக்களப்பு மாவட்டத்தின் அண்மை காலமாக இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு போர் நிறுத்தம் அமுலில் உள்ள போது. பொதுமக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இம்மாவட்ட மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் நோக்கிவருகின்றார்கள்.
 
மாவட்டத்தின் இராணுவக்கட்டுபாட்டு பகுதிகளில் பல்வேறு அசம்பாவிதங்கள் நாளாந்தம் இடம் பெற்றுக் கொண்டுவருகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையில் பொதுமக்கள் நம்பிக்கை வைத்து  தமது இயல்பு வாழ்;க்கை திரும்ப வேண்டும் என எதிர்பார்கள் உடன்படிக்கையில் உள்ள விடயங்கள் சிறந்த முறையில செயல்படுத்தப்பட வேண்டும் என  மிகவும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. பாடசாலைகள்  கோயில்கள் மற்றும் பொதுகட்டடம் போன்றவற்றில் உள்ள இராணுவத்தினர் அகல வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட விடயங்கள் பழமையாக இருந்தாலும் இதில் எந்த நடவடிக்கையில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை சிந்தித்து பாருங்கள். யுத்த நிறுத்தம் ஏற்பட்டு நான்கு வருடம் மூடியும் தர்ணத்தில் மக்கள் அடைந்துள்ள நன்மைகள் எந்தளவு என்பதனை பாருங்கள்.
 
2001ல் ஏற்பட்ட சமாதானத்தின் மூலம் சிறியதொரு கால இடைவெளில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தாலும் இக்காலப்பகுதியிருந்து இன்று வரைக்கும் கனிசமான துன்பங்களையே இப்பகுதி மக்கள் மாத்திரமல்ல வடகிழக்கு மக்கள் எதிர் நோக்கியுள்ளார்கள். மட்டக்களப்பினை பொறுத்தவரையில் போர் நிறுத்த காலப்பகுதியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
இராணுவம் மற்றும் இராணுவ புலனாய்வு அவர்களின் கூலி படைகள் தேச தூரோகிகள் போன்றவற்றினால் இக்கால பகுதியில் பொதுமக்கள் மற்றும் போராளிகள் என கொல்லப்பட்டுள்ளார்கள். அத்துமீறல்கள் ஒரு புறமிருக்க போக்குவரத்து மேற்கொள்கின்ற அப்பாவி பொதுமக்கள் மீது பல்வேறு தொந்தரவுகளை இன்றும் கூட செய்வதனை காணக் கூடியதாகவுள்ளது.
 
இதில் ஒரு கட்டம் தான் 2002ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்ஸிம் உறவுகளை சீர்குலைக்கும் நோக்குடன் இராணுவம் பொலிஸாரினால் கட்டவிழுத்தப்பட்ட வன்முறைகள் இவற்றில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இவற்றுக்கு ஒருசில முஸ்ஸிம் அரசியல் வாதிகள் மற்றும் இராணுவம் பொலிஸார்கள் பின்னனில் செயல்பட்டார்கள். என்பது யாவரும் அறிந்த உண்மை.
 
விடுதலை புலிகளின் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டது. உட்பட 2005ம் ஆண்டு நடுப்பகுதியில் சந்திவெளியில்  வீதிதடையை அகற்ற கோரி இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் அடாவடிகளினால் அப்பகுதியை சேர்ந்;த வயோதிபர் சுட்டு கொல்லப்பட்டதுடன் பாடசாலை மாணவர்கள் உட்பட 20க்கு மேற்பட்ட பொதுமக்கள்  காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
 
இப்பகுதியில் ஆயுத குழுக்களுக்கு ஆதரவாக அமைக்கப்பட்ட சிறிய இராணுவ காவலரண் ஒன்று அமைத்து போக்குவரத்தின் போது பொதுமக்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தி வந்தார்கள் இவற்றினை ஆட்சேபித்து இராணுவத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் செய்தார்கள். அதாவது சுறுக்கமாக சொன்னால் ஒரு காவலரண் அகற்றுவதற்கான  விலை ஒரு உயிர் கொல்லப்படுவதும் மக்கள் காயப்படுத்தப்படுவதுமாகும்.
 
இதே போன்று சிறிலங்கா இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த மீறல்களை  அடுக்கி கொண்டே போகலாம். எனினும் அண்மைக்காலமாக இராணுவம் யுத்தம் ஏற்படும் என்ற உணர்வில் தான் செயல்பட்டுவருகின்றது. வீதியோரங்களில் காவலரண்களை அமைக்கின்றார்கள்  முகாம்களில் பதுங்குழிகளை வெட்டி பலப்படுத்துகின்றது. அத்துடன் சுற்று வேலிகளை அமைக்கின்றது. ஆயுதகுழுக்களுக்கு ஆயுதம் மற்றும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கின்றார்கள்.
 
மாவட்டத்தின் சில இடங்களில் இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ வாகன தொடரணி மீதான கிளைமோர் தாக்குதல் மற்றும் கைகுண்டு தாக்குதலினால் அச்சமடைந்த நிலையில் வீதியில் இருமருங்கிலும் உள்ள காடுகள் மற்றம் பற்றைகளை வீதியால் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வெட்ட வைக்கின்றாhகள். இது தான் இன்றைய நிலையாகயுள்ளது.
 
இதே போன்று போர் நிறுத்த கண் காணி;ப்பு முன்னிலையில் போர் நிறுத்த மீறல்களை மேற்கொண்டுவருகின்றார்கள். ஏறாவூர் பகுதியில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுயிருக்கும் கடற்படை இராணுவ முகாம் வெல்லாவெளி பகுதியில் சூனிய பிரதேசம் நோக்கி இராணுவ முகாம் பலப்படுத்தல் மற்றும் வாகரை கிரிமிச்சை பகுதியில் சூனிய பிரதேசம் நோக்கி முன்னேறியுள்ளமை அப்பட்டமாக யுத்த நிறுத்த மீறலாகயுள்ளதை காணலம்.
 
இராணுவக்கட்டுப்பட்டு பகுதியில் உள்ள மக்கள் விடுதலை புலிகளின் கட்டப்பாட்டு பகுதிக்கு செல்லும் போதும் அவர்களின் பகுதியிலிருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும்  மக்கள் இன்றும் எவ்வளவு சிரமத்தினை எதிர் நோக்குகின்றார்கள். அண்மையில் கூட விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு பொருள்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டது.
 
அதே போன்று கிரான் பாலத்தினுடாக செல்லும் விவசாயிகள் வயல் பகுதிக்கு செல்ல முடியாது விவசாய பசளை வகைகளை எடுத்து செல்ல தடை. கறுத்த பாலத்தினால் சென்ற இளைஞர்கள் ஒட்டுப்படைகளினால் கைது செய்யப்பட்டு சுட்டு கொல்லப்பட்டார்கள். களுவாஞ்சிகுடி மண்முனை அம்பலாம் துறை போன்ற பாதைகளினுடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றார்கள்
 
பொருள்கள் பயணிகள் செல்லுவதற்கு மட்டும் அல்ல படுவான்கரையில் அச்சிடப்படும் பத்திரிக்கையான ஈழநாதம் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு செல்ல விசேட அதிரடிப்படையினர் தடைவிதித்தார்கள். அதே வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இப்பத்திரிக்கை விநியோகி;க்கும் அப்பாவி பொதுமகன் இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
மட்;டக்களப்பு மாவட்டத்தின் இரு சமூக மக்கள் வாழும் பகுதி என்பதால் மொழில் ஒன்றுபட்டாலும் மதம் கலைகலாச்சாரம் பண்பாடுகளில் வேறுபட்டுள்ளார்கள். முஸ்ஸிம் சமூகத்தினை மிகவும் இலகுவான முறையில் அரசியல் தமிழர்க்கு எதிரான வன்முறைகளில் அரசாங்கம் ஈடுபடுத்திவருவது தான் வேதனையளிக்கின்றது. அதாவது 1983ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்க்கு எதிராக அரசு வன்முறைகளை ஏற்படுத்திய போது முஸ்ஸிங்களையும் பயன்படுத்தி கொண்டார்கள். மாவட்டத்தின் தியாவட்டவான் மைலங்கரச்சி வாழைச்சேனை மிறாவோடை கறுவாக்கேணி ஏறாவூர் தமிழ் பகுதிகள் காத்தான்குடியை அண்மித்த பகுதிகள் போன்றவற்றில் இராணுவத்தின் உதவியுடன் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
 
இந்த காலப்பகுதி மட்டுமல்ல 1985 1990 1997 2002 இந்த ஆண்டுகளை குறிப்பிட்டு சொல்ல கூடியது. எனினும் இராணுவத்தின் உதவியுடன் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டு அதன் மூலமும் தமிழ் இளைஞர்களை அழித்தார்கள். மொத்தமாக தமிழர்களின் உயிர்கள் மற்றம் சொத்துக்களை அழித்தனர். அவ்வாறான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இன்றும்.
 
தமிழ் இளைஞர்கள் சுட்டு கொல்லப்படுகின்றார்கள். வீதி வீடுகள் என நாளாந்தம் சோதனை நடவடிக்கை இரவு வேளையில் இனம் தெரியாத ஆயுதபாணிகளின் நடமாட்டம் ஆங்காங்கே கைகுண்டு வீச்சு துப்;பாக்கி பிரயோகம் குண்டு தாக்குதல் சில கிராமங்கள் சுற்றிவளைப்பு தமிழ் இளைஞர்கள் கைது இடையிடையே முஸ்ஸிம் பொதுமகன் கொல்லப்பட்டது ஹர்த்தால் கடையடைப்பு இதே போன்று தமிழ் பகுதியில் இடம் பெற்றால் தமிழ் பகுதியில் ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் என பல சம்பவங்கள் ஏற்பட்டதாகவே உள்ளது.
 
இத்தனைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான வீதியின் 20க்கு மேற்பட்ட இராணுவ முகாம் மற்றும் 15க்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ள போதும் வீதி பாதுகாப்பு என இராணுவம் பொலிஸ் என இரவு பகலாக ஈடுபடுத்தினாலும் படுகொலைகள் கொள்ளை ஆள் கடத்தல் என தொடர்ந்து இடம் பெறுகின்றது. எனினும் பொதுமக்களால் இது தொடர்பான எத்தனையோ முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும் இதுவரையில் இச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள்  அல்லது தடயங்கள் என எதுவும் கைப்பெற்றப்பட வில்லை என்று தான் கூற வேண்டும்.
 
அண்மையில் கூட வந்தாறுமூலையில் இரு சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதே போன்ற கிரான் கோரகல்லிமடு பகுதிகளில் இளைஞர்கள் சுட்டு கொல்லப்பட்டடார்கள். என்ன நடந்தது இது இவ்வாறு இருக்க புதிய அரசு பொதுமக்கள் விடயத்தில் அசமந்த போக்கினையே தொடர்ந்;தும் கடைப்பிடிக்கின்றார்கள். இவ்வாறு தொடர்ந்தால் இறுதியில் மக்கள் போராட்டம் ஏற்படுவதனை யாராலும் தவிர்க்க முடியாது.
 
பல ஆண்டு காலமாக தமிழ் மக்கள் பல துன்பங்களையும் துயரங்களை அனுபவித்துள்ளார்கள். இனியும் இவ்வாறான செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டார்கள். இப்பகுதியில் உள்ள இராணுவம் பொலிஸ் மற்றும் ஆயுதகுழுக்களை இம்மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் காலம் மிக தொலைவில்லை. விடுதலை பெற்ற நாடு; தென்னாபிரிக்காவில் கூட இறுதியில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து தான் அவர்களுக்கான சுதந்திரத்தினை வெள்ளையர்களிடமிருந்து பெற்றார்கள்.
 
உலகில் மக்கள் சக்திக்கு முன்னால் எதுவும் தூசி அப்படியான நிலையும் வடகிழக்கில் ஆரம்பித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளில் ஒன்றுதான் கிராமங்களில் கிராமிய பாதுகாப்பு படைகள் உருவாக்கப்பட்டுவருகின்றது. சிறுபான்மையாக இருந்தாலும் தற்றூணிவும் சிறந்த வழிநடத்தலும் இருக்கும் வரை விடுதலை என்பதற்கான போராட்டத்தினை அழித்துவிட முடியாது. சிறிலங்கா மட்டுமல்ல உலக நாடுகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..