|
ஸ்ரீலங்கா அரசுக்கு எந்தவித உதவிகளையும் இந்தியா வழங்கக் கூடாது |
|
|
|
Friday, 30 December 2005 |
|
சென்னையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரகடனம் இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியிலான எவ்விதமான உதவியும் செய்யக் கூடாது என்று இந்திய மத்திய அரசை ஈழத் தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.
இராணுவத் தளவாடங்களை விற்பது உள்பட போர்ப் பயிற்சி அளிப்பது, வானூர்;தி மற்றும் கடற்படை தளங்களைப் புதுப்பித்துத் தருவது போன்ற எந்தவிதமாக உதவியையும் வழங்க கூடாது என கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கி. வீரமணி முன்மொழிந்தார். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கரவொலி எழுப்பி தீர்மானத்தை வழிமொழிந்தனர்.
நோர்வே அரசை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்திய அரசை முன்னிறுத்தி இலங்கை
அரசுக்குச் சார்பு நிலையை இந்தியா மேற்கொள்வது போன்ற தோற்றத்தை பன்னாட்டு
அரங்கில் உருவாக்க இலங்கை தந்திரமாக முயல்கிறது. இத்திட்டத்திற்கு இந்திய
அரசு இடம் கொடுக்கக் கூடாது.
இராணுவத் தளவாடங்களை விற்பது உள்பட போர்ப் பயிற்சி அளிப்பது, வான் மற்றும்
கடற்படை தளங்களைப் புதுப்பித்துத் தருவது போன்ற எந்தவிதமாக இராணுவ
உதவியையும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு எக்காரணத்தை முன்னிட்டும் செய்யக்
கூடாது. அப்படி எந்;த உதவி வழங்கப்பட்டாலும் அது தமிழர்களுக்குத் தீங்கு
விளைவிக்கும் என்பதாலும் இலங்கையில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, தாய்த்
தமிழகம் மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களை அது
காயப்படுத்தும். என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|