பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow போருக்கு போவார மகிந்தா?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

போருக்கு போவார மகிந்தா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 12 January 2006
கோண்டாவிலில்  04.12.2005 அன்று நடந்த கிளைமோர் தாக்குதலின் பின் மக்களிடம் ஒரே பரபரப்பு போர் தொடங்கிவிட்டதா? அல்லது நாளை போர் தொடங்குமா? கடும்போக்காளர்; அல்லவா ஜனாதிபதி மகிந்தர்! சரி மகிந்தர் சும்மா இருந்தாலும், இனவாத கும்பலான ஜே.வி.பி, கெலஉறுமய விடுவார்களா? நோர்வே தூதரகத்தின் முன் அன்நாட்டுக்கொடியை எரித்த வீராதிதீரர் அல்லவா அவர்கள். இவர்கள் அடங்கினாலும் போரில் இருதடவை காயப்பட்ட ஒரேயோரு இராணுவத்தளபதி எனவும், கடும் போக்காளர் எனவும் சிங்கள இனவாதிகளால் புகழப்படும் லெப். ஜெனரல் சரத்பொன்சேக விடுவார தமிழர் மீது போரை ஏவிவிடமாடடார்?
ஆனால் எதுவுமே நிகழவில்லை புத்தர் அரசமரத்தின் கீழ்இருந்து ஞானம் பெற்றது போல ஸ்ரீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் நிமால்; ஸ்ரீபால டீ சில்வா சொன்னார் அரசு பொறுமை காக்குமாம் போர் நிறுத்தத்தை மதிக்குமாம். வழமைபோல விடுதலைப்புலிகளையும் குற்றம் சொல்ல தவறவில்லை. போர் போர் என வாக்கு கேட்ட அரசு இது, போர் நிறுத்தத்தையும் நோர்வேயையும் கடுமையாக விமர்சித்த ஆளும் கூட்டணி இவர்கள், ஒரு காவல்துறை உறுப்பினர் சுடப்பட்டாலும் யுத்தநிறுத்தத்தை மாற்றவும்  நோர்வேயை வெளியேற்றவும் துடிப்பவர்கள். ஏன் அமைதியானார்கள்? போர் என்று இனவாதம் கக்கி பாமரசிங்கள மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கிய இவர்களால் போருக்கு போகமுடியுமா? அரசியல், இராணுவ, பொருளாதார களங்களை பார்ப்போமாயின் இதற்கான விடை கிடைக்கும்.

அரசு போரைத் தொடங்கினால் சர்வதேச அரங்கில் ஏற்படும் அவப்பெயரினால் சார்வதேச உதவிகள் கிடைக்காது போகும் என்பது ஒரு காரணம். யார் போரை தொடக்குவது என்பது தான் பிரச்சனை. நிழல் யுத்தம் நடத்திய அரசுக்கு பொங்கியெழும் மக்கள் படையின் நிழல் யுத்தமும், கண்ணுக்குத்தெரியாத  நிழல் எதிரியும் கற்பனை பண்ணமுடியாத பதிலடி. விடுதலைப்புலிகள் செய்ததாக அரசு சொல்கிறது ஆனால் உறுதிபடபடுத்த ஆவணங்களைக் கேக்கிறது கண்கணிப்புக்குழு. எனவே அரசு வேடிக்கை பார்ப்பதைத்தவிர வேறுவழியில்லை.

ஸ்ரீலங்கா இராணுவத்தை பெறுத்தவரை தற்போது போரை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை, எண்ணிக்கையில் தான் 120,000 படையினர். ஆனால் சண்டையிடும்திறன் 52, 53, 55 ஆகிய படையணிகளுக்கே உண்டு. ஏனைய படையணிகள் கைப்பற்றிய இடங்களை பாதுகாப்பதில் தான் ஈடுபடுத்தப்படுகின்றன. ஆனால் இரணுவத்தின் 52, 53, 55 ஆகிய படையணிகள் ஓயாதஅலைகள்-03, ஆனையிறவு, தீச்சுவாலை நடவடிக்கைகளில் சந்தித்த பேரிழப்பு ஸ்ரீலங்கா இராணுவத்தின் போரிடும் தன்மையை இல்லாது செய்துவிட்டது. இரணுவம் இப்போது தற்காப்பு யுத்தம் செய்யவே திறன் அற்றநிலையில் உள்ளது. 25,000 இற்கு மேற்பட்ட படையினரைக்கொண்ட மாங்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான தொடர் முகாம்களும், 20,000 துரப்புக்களைக்கொன்ட ஆனையிறவும் அழித்தொழிக்கப்பட்டதானது புலிகள் அடுத்து வரும் போரில் இவற்றை விட பெரிய முகாம்களைத்தான் தாக்குவார்கள் என்பது உறுதி. அதனால் தான் புலிகளின் தளபதி ஒருவர் சொன்னார் “ நாங்கள் யாழ்குடாநாட்டில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை ஒரு இராணுவமுகாமாகவே பார்க்கிறோம் என்று”.  யுத்தநிறுத்தத்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கா வந்துபோன பிரிட்டிஷ் இராணுவ நிபுணர்கள் சொன்ன கருத்து “ஸ்ரீலங்கா இராணுவம் இனி யுத்தம்புரியும் நிலையில் இல்லை, அவர்கள் அமைதிப்படைக்குரிய பணிக்கே ஏற்றவர்கள்” என்று. இராணுவம் தாக்குதல் திறனுடன் இருந்திருப்பின் கருணாவின் தேசத்துரோகத்தனத்தை பயன்படுத்தி போரில் இறங்கியிருக்கும். அப்படி எதுவுமே நிகழவில்லை, அப்போதும் வேடிக்கைதான் அவர்களால் பார்க்க முடிந்தது. இதானால் தான் இராணுவம் இப்போது நிழல்யுத்தம், ஒளித்திருந்து சுட்டுவிட்டு அல்லது கிளைமோர் தாக்குதல் நடத்திவிட்டு ஓடுவது போன்றதில் ஈடுபடுகிறது. அதாவது கெரில்லா யுத்தம் நடத்துகிறது.

சர்வதேசத்தை பொறுத்தவரை மகிந்தாவின் கூட்டணியில் உள்ள ஜேவிபியை ஒரு ஜனநாயகக் கட்சியாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இதைவிட இக்கூட்டணியின் இனப்பிரச்சனை தொடர்பான கருத்துக்களும் உலகநாடுகளால் எற்றுக்nhள்ளக்கூடியதாக இருக்கவில்லை. இதுவே மகிந்தாவின் இந்தியபயணத்தின் தோல்விக்கு காரணமாகின. எனவே யுத்தம் ஒன்று ஏற்பட்டால் சர்வதேச உதவிகளும் கேள்விக்குறியே.

அரசியல் அரங்கை எடுத்தால் வெறும் ஒற்றை எண்ணில் பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருந்த ஜேவிபி இன்று 40 ஆசனங்களை கொண்டிருக்குமளவுக்கு சந்திரிக்கா வளர்த்து விட்டுள்ளார். இது அவர் தானது பதவி ஆசைக்காக ஏற்படுத்திக்கொடுத்த வழி. மகிந்தாவும் தனது அரசியல் லாபத்திற்காக அனைத்துக்கொண்டார், ஆனால் ஜேவிபியின் திட்டம் வெறும் பாராளுமன்ற ஆசனங்கள் அல்ல  ஆயுதப்புரட்சி மூலம் கைப்பற்ற முடியாத நாட்டை அரசியல் மூலம் கைப்பற்றுவதும், சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கியதேசியக்கட்சியையும் இல்லாதொழிப்பது தான்;. அதற்குரிய வேலையின் ஆரம்பமாக இராணுவம், புலனாய்வுத்துறை என சகலதுறைகளிலும் ஊடுருவியுள்ளது ஜேவிபி. தற்போது தென்னிலங்கையில் நடைபெறும் பல படுகொலைகளின் பின்னனியில் ஜேவிபியின் பங்கு உள்ளது. இது மகிந்தாவிற்கும் தெரியும் ஆனால் எல்லாம் கைமீறியநிலை. மகிந்தா யுத்தத்தில் இழப்பதும், பேச்சுவார்த்தையில் கொடுப்பதும்  ஜேவிபியின் அரசியலுக்குதான் இலாபம். எனவே சமாதானம் மட்டுமல்ல யுத்தத்திலும் நம்பகத்தன்மையற்ற கூட்டணியில் மகிந்தா சிக்கிப்போயுள்ளார்.

தென்பகுதி மற்றும் மலையகக் கட்சிகளின் வன்னிப்பயணமும், வடகிழக்கு தமிழ்கட்சிகளுடனான கூட்டும் சிங்கள தேசத்திற்கு விழுந்த இன்னுமொரு அரசியல், இராணுவ பின்னடைவாகும். பேச்சுவார்த்தைமூலம் தமிழருக்கு கிடைக்கபோகும் அரைகுறைதீர்வுக்கும் ஆப்புவைக்க தமிழர்களுக்கு கொடுக்கப்படும் சம உரிமைகள் தமிழர் பகுதிகளில் வாழும் முஸ்லீம், சிங்கள மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர்கள். இப்போ தமிழர்களுக்கு கொடுக்கப்படும் சம உரிமைகள தென்பகுதிகளில் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்கட்சிகள் சொல்லும்போது என்ன செய்யப்போகிறார்கள். தென்பகுதி மற்றும் மலையகக் கட்சிகளின் இம்முடிவானது ஒரு வரலாற்றுத்திருப்புமுனை. அரசிலையும்தாண்டி இராணுவரீதியாக பார்த்தால் தென்பகுதிக்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதுடன் ஸ்ரீலங்கா இராணுவத்தை மேலும் பலவீனமாக்கியுள்ளது.

அடுத்து தென்பகுதியின் பாதுகாப்பை பொறுத்தவரைக்கும் தலைநகர பாதுகாப்பு மிக பலவீனமான நிலையிலேயே உள்ளது வெளிநாட்டமைச்சர் தொடக்கம் புலனாய்வுத்துறை முக்கிய அதிகாரிகள்வரை பலடசின் அதிகாரிகளை இழந்து நிற்கிறது அரசு. பல கொலைகளில் சிங்களவர் தொடர்புபட்டிருப்பது அதிர்ச்சிதரும் விடயம். சிங்கள, ஆங்கில ஊடகங்களின் கருத்துப்படி பல நூறு கரும்புலிகள் ஊடருவியுள்ளதாயும், இலகுவில் அணுகமுடியாதபடி ஒரு வலைப்பின்னல் அமைத்து செயற்படுவதாயும் சொல்கிறார்கள். பதினைந்து விசேட கரும்புலிக்கொமொண்டோ படையால் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறப்பைக்கொண்ட கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தை அழிக்கவும் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் முடியுமென்றால் போரின் போது கொழும்பையும் அதன் பொருளாதாரமையங்களையும் பாதுகாக்க பெரும்படைவலு அரசுக்குத்தேவை. ஆனால் வடக்கு கிழக்கை தக்கவைத்துக்கொண்டு தலைநகரை பாதுகாப்பது முடியாதகாரியம்.

பொருளாதாரத்தை பொறுத்தவரை அடிக்கடி சரிந்துவிழும் பங்குச்சந்தை, ஜேவிபி அணியின் கூட்டணியால் சர்வதேசமுதலீட்டாளர்களின் தயக்கம், தேர்தலில் கொடுக்கப்பட்ட அதிகப்படியான மானிய சலுகைகளில் குறைந்த அளவாவது நிறைவேற்றவேண்டிய கட்டயம் என அதிகப்படியான அழுத்தத்தில் அரசு உள்ளது. சர்வதேசநாடுகளும் உதவிகளை முன்புபோல் கண்ணைமூடிக்கொண்டு கொடுப்பதில்லை சமாதான முயற்சிகளையும் ஆராய்ந்து பார்க்கின்றன. பாதுகாப்புக்கென அதிகதொகையாக 9600 ஆயிரம் கோடிகளை ஓதுக்கியுள்ளபோதும் யுத்தம் ஆரம்பித்தால் இது இன்னும் அதிகமாவதுடன் பொருளாதாரமையங்கள் தாக்கப்படின் அரசு தப்பிப்பிழைப்பது அரிது.

இங்கு ஆராயப்பட்டது மிகச்சிலவிடயங்கள் இதைவிட அதிக அழுத்தங்கள் இழுபறிகளுடன் ஆட்சிநடத்திக்கொண்டிருக்கும் மகிந்தா போருக்கு போவார? ஒரு முழுயுத்தத்தை எதிர்கொள்ள அவரால் இயலாது என்பதே உண்மை. சமாதான காலத்தை இழுத்து அக்காலப்பகுதியில் சர்வதேசசதிவலையில் விடுதலைப்புலிகவையும் தமிழ் மக்களையும் சிக்கவைத்து, போராட்டத்தை மழுங்கடிக்கவும். நிழல் யுத்தத்தை தொடர்ந்து இனப்பற்றாளர்களையும்;, புலிகளின் தளபதிகளையும் ஏன் தலைமையையும்கூட அழித்து போராட்டத்தை சிதைப்பதே அவரின் திட்டம். எனவே எத்தனை கிளைமோர் வெடித்தாலும் எத்தனை டோரர மூழ்கினாலும் மகிந்தாவிற்கு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் மக்கள் போராட்டத்தை தீவிரமாக்கி அரசின் சதிகளை முறியடித்து எம் தலைவனின் காலத்தில் விடுதலையை வென்றெடுப்பது தமிழ் மக்களாகிய எமது வரலாற்றுக்கடமை.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..