|
பல்வேறு நாடுகளில் ஆட்சி மீது மக்களுக்கு திருப்தியில்லை |
|
|
|
Thursday, 15 September 2005 |
|
பல்வேறு நாடுகளில் ஆட்சி மீது மக்களுக்கு திருப்தியில்லை - பிபிசி கருத்துகணிப்பு முடிவு பல்வேறு நாடுகளில் மக்கள் தம்மீது நடக்கும் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உலக அளவில் மிகப்பெரிய கருத்துகணிப்பு ஒன்றை பிபிசி நடத்தியுள்ளது. மக்களின் விருப்பத்திற்கேற்ப தமது நாடுகள் ஆட்சிசெய்யப்படுகின்றன என்பதை வெறும் 30 சதவீத மக்கள்தான் ஆமோதிக்கிறார்கள் என்பதாக இந்த சுற்றாய்வின் முடிவுகள் அமைந்துள்ளன.
ஆட்சி மீது குறைசொல்வது பொதுவான மனித குணம் என்று இந்த சுற்றாய்வு தெளிவாகக் காட்டியுள்ளது என்றாலும் சில பகுதிகளில் மக்கள் தாங்கள் ஆட்சி செய்யப்படும் விதம் குறித்து ஓரளவுக்காவது திருப்தியுடன் இருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. ஆட்சி குறித்து மக்கள் திருப்தியுடன் இருப்பதாக முடிவு தந்த நாடுகளில் தென்னாப்பிரிக்கா, நோர்வே, ஸ்வீடன், டென்மார்க், மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த நாடுகளில் மக்கள் தமது ஆட்சி மீது திருப்தியடைந்திருப்பதன் உத்தேச காரணங்கள் குறித்து பிபிசி செய்தியாளர் எலிசபெத் பிளண்ட் அனுப்பிய செய்திக்குறிப்பின் தமிழாக்கத்தை நேயர்கள் கேட்கலாம். bbc
|