வெற்றி பெற்று தந்துவிட்டு நீர் உறங்குகின்றீர்

eelam01100001மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்
பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்
புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்
பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்
பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை
வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்
வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை
வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்
வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த
ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்
நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த
ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்
வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற
வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்
நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்
நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்
நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்
பஞ்சு நெருப்பாகி வரும் பகையை முடிப்போம் -பிர
பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்
பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

2 Comments on “வெற்றி பெற்று தந்துவிட்டு நீர் உறங்குகின்றீர்”

  • C.PARAMESWARAN wrote on 14 June, 2010, 13:24

    மிக சிறந்த பதிவு, நன்றி

  • C.PARAMESWARAN wrote on 14 June, 2010, 13:31

    பிரபாகரன் திரும்ப வருவார், தென்றல் புயலாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.