இன்று காலை கதிரையில் இருந்து விழுந்த மகிந்த – வீழ்ச்சியின் ஆரம்பம் என்கிறார் ஜோதிடர்: வீழ்ந்த காட்சிகள் அடங்கிய ஒளிப்பட நாடாக்கள் பறிமுதல்

Rajapaksaஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் தனது முதுகில் ஏற்பட்ட ஊபாதை காரணமாக, பிரதான உரையை நிகழ்த்தவிருந்த ஜனாதிபதி சிகிச்சைக்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முன்னதாக  சம்பிரதாய முறைப்படி குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, தனது ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர சென்ற போது, அவரது ஆசனம் பின்பக்கமாக சரிந்துள்ளது.
 
உடனடியாக ஜனாதிபதி தூக்கிய அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வேறு ஒரு ஆசனத்தில் அமரச் செய்துள்ளனர். இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களிடம் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர், ஜனாதிபதி விழுந்த காட்சிகளை கத்தரிக்குமாறு கூறியுள்ளனர். சில தொலைக்காட்சிகளின் விடியோ நாடாக்களை கைப்பற்றிய ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர், நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் அடங்கிய விடியோ நாட அனைவருக்கும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

கலாசார அமைச்சின் செயலாளரினால் நடத்தப்பட்ட நன்றியுரையின் பின்னர், சிலருக்கு விருதுகளை வழங்கிய ஜனாதிபதி, உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜோதிடர் ஒருவர், ஜனாதிபதி தனது ஆசனத்தில் இருந்து விழுந்தமையானது அவரது வீழ்ச்சியை குறிப்பதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற சனிப் பெயர்ச்சியானது ஜனாதிபதிக்கு பாதமான பலனங்களை ஏற்படுத்தும் என ஏற்கனவே ஜோதிடர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

3 Comments on “இன்று காலை கதிரையில் இருந்து விழுந்த மகிந்த – வீழ்ச்சியின் ஆரம்பம் என்கிறார் ஜோதிடர்: வீழ்ந்த காட்சிகள் அடங்கிய ஒளிப்பட நாடாக்கள் பறிமுதல்”

  • Rose wrote on 14 September, 2009, 22:17

    இதுதான் ஆரம்பம். உன் விதியை நீயே தேடிக்கொள்.

  • koobi wrote on 15 September, 2009, 4:27

    he he…vilunthanada vilunthitdan
    thamilaruku nalla kalam arampidichuthu

  • kumutha wrote on 15 September, 2009, 16:57

    ஆரம்பப்புள்ளி வெகு சீக்கிரமா முழுக்கோலமானால் சந்தோசம்.இவனுக்குக் கிடைக்கும் தண்டனைதான் வால்ப்பிடிகளுக்கான பாடம்

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.