திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறப்பும் அறம் சார்ந்த கேள்விகளும்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தையார் சிறிலங்கா படைகளின் தடுப்புக் காவலில் இருந்த போது கடந்த புதன்கிழமை இரவு [06 ஜனவரி, 2009] இறந்துவிட்டார்.

இந்தத் தகவலை சிறிலங்கா படைகளின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

86 வயது முதியவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் அவரது துணைவியாரும் – வன்னிப் போரின் இறுதியில் – முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டனர்.

கடந்த 2009 மே 16 ஆம் நாள் முதல் – வெளிச் சொல்லப்படாத மறைவிடமொன்றில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

86 வயதான அந்த முதியவர் படைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும், அங்கேயே இறந்து போனார் என்பதும் அறம் பற்றிய பல கேள்விகளை எழுப்புகின்றது.

இவரைப் போன்றே தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு ஏற்கனவே இறந்து போன பல முதியோரினதும் நினைவுகளுடன் இந்த அறம்சார் கேள்விகள் உரத்து எழுகின்றன.

“பயங்ரவாதி” என்று சிறிலங்காவால் சொல்லப்பட்ட பிரபாகரனின் பெற்றோராக இருந்ததும், விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்தார்கள் என்பதையும் தவிர அவரும் அவரது துணைவியாரும் – வேறு எந்த வகையிலும் அந்த 400,000 மக்களில் இருந்து வேறுபட்டவர்கள் அல்லர்.

இருந்த போதும் – மற்றவர்களில் இருந்து பிரிக்கப்பட்டு – தனியாக அவர்கள் படைத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கு என்ன நியாயங்கள் இருந்தன?

அதற்கும் மேலாக – அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் தமது உறவினர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டு – அவ்வாறானவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தும் கூட – வேலுப்பிள்ளை தம்பதியர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தது ஏன்?

அல்லது – தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 124,000 பேர் வரையி்ல் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தும் கூட – எண்பது வயதைத் தாண்டிய நோயாளிகளான அந்த முதியவருக்கும் அவரது துணைவிக்கும் – பிரபாகரனைத் தவிர்த்து வேறு பிள்ளைகள் இருந்தும் கூட – அவர்களிடம் சென்று சேர்ந்து வாழ வழியமைத்துக் கொடுக்கப்படாதது ஏன்?

விடுதலைப் புலிகளின் பல முதன்மை உறுப்பினர்களின் குடும்பத்தினர் கூட இவ்வாறு தமது வீடுகளுக்குச் சென்று வாழ அனுமதிக்கப்பட்டுவிட்டார்கள்; ஆனால், இந்த வயோதிபர்கள் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது ஏன்?

இவர்களைப் போன்றே பல்வேறு விடுதலைப் புலிப் போராளிகளின் குடும்பத்தினரும் கூட (துணைவியரும் – குழந்தைகளும்) தடுப்புக் காவில் இன்னும் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான அனைத்துலக நீதி நியமங்கள் என்ன?

இந்தப் பெற்றோரும், குடும்பத்தினரும், மனைவியரும், குழந்தைகளும் இழைத்த குற்றங்கள் என்ன?

இவை எத்தகைய நியாய விழுமியங்களுக்கு உட்பட்டது?

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் கொல்லுதல் அல்லது தடுத்து வைத்தல் என்பவற்றுக்கு அப்பால் – அவர் இழைத்ததாகக் கருதப்படும் குற்றங்களுக்காக அவரது குடும்பத்தையும் தண்டித்தல் என்பது எவ்வகையி்ல் நீதியானது?

இது எல்லாமே, குறிப்பாக வேலுப்பிள்ளை குடும்பத்தினர் தடுத்து வைக்கப்பட்டது – ஒரு வகையில் ‘வன்மம் தீர்த்தல்’ என்பதைத் தவிர வேறெதுவுமே இல்லைத்தானே?

அறத்தின் அடிப்படையிலான இந்தக் கேள்விகளை சிறிலங்கா அரசுத் தரப்பிடம் கேட்பதில் எந்தப் பொருளும் இல்லை.

ஆனால் – மாற்று அரசியலாளர்கள், மதங்களின் வழியான அறங்களை பேசுவோர், மதங்கள் முன்வைக்கும் வாழ்வு நெறிகளைப் போதிப்போர், அவற்றைக் கடைப்பிடிப்போர், மனித உரிமையாளர்கள், மனிதார்ந்த ஆர்வலர்கள் என அறியப்பட்டோர் என அனைவரையும் நோக்கி் இந்தக் கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

குறிப்பாக – பெளத்த வாழ்வியல் போதனைகளைப் பின்பற்றும் ஒரு இனத்திற்குள் – பெற்றோரை வணங்குதல், பெரிவர்களிடம் ஆசிபெறுதல் போன்றதான பெளத்த அறங்கள் தொடர்ந்தும் சீரழிந்து வருவதையே – திருவேங்கடம் வேலுப்பிள்ளை போன்ற நூற்றுக்கணக்கான முதியோரின் இறப்புக்கள் உணர்த்துகின்றன.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

3 Comments on “திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறப்பும் அறம் சார்ந்த கேள்விகளும்!!”

  • Neruppu wrote on 9 January, 2010, 6:14

    நூற்றுக்கணக்கான முதியோரின் இறப்புக்கள் உணர்த்துகின்றன. >>>>>>>>>>>>>>>. என்ன நூற்று கணக்கான முதியோரோ? ஒவ்வொரு மாதமும் இன்னும் ஆயிரம் முதியோர் அங்கு மாணிக் முகாமில் இறக்கிறார்கள். ஐ நா உடனே சென்று இந்த காந்தி குடும்பத்து அநியாயத்திற்கு முடிவு கட்டவேண்டும். சிங்கல்லன் ஒரு போதும் நேரா விளையாட துணிவில்லாதவன் எப்போதும் காங்கிரஸ் குடும்பத்தை போல் முதுகில் குத்தி தான் வெல்ல தெரியும். ஆனால் நந்திக்கடல் போரில் தமிழனுக்கு முன்னாள் இருந்த பயங்கரவாத முத்திரை நந்தி விலகிவிட்டது. இப்போது நமது படித்த இரண்டாம் தலை முறையினர் ஆங்கிலம், பிரெஞ்சு, டச் என்று எல்லா பாசையிலும் 700 கோடி மனித இனத்திற்கு தமிழருக்கு நடக்கும் அநியாயங்களை எடுத்து கூறுகிறார்கள்.

  • Neruppu wrote on 9 January, 2010, 6:31

    ஆயுதம் தாங்கிய புலியை எதிர்க்கும் இராணுவ எதிரியை அவனது துணிவிற்கு மதிப்போம் ஆனால் எண்பது வயது முதியோரை துன்புறுத்தி கொன்றவர்களை பார்த்துக்கொண்டு சும்மா இனியும் இருக்க கூடாது! இது தமிழ் நாட்டு காரருக்கும் தான். காங்கிரஸ் பார்சி குடும்பத்திற்கு திராவிடத்தின் தமிழ் மூளை அழிவது தான் விருப்பம். சிங்களவன் இலங்கையை சீனாவிடம் குடுத்து உங்களுக்கும் தான் ஆப்பு அடிக்கிறான். சிங்களவன் ஒரு கொஞ்ச பேர் காசோட இருக்கிறவை தான் அரசியலில் இரங்கி அட்டக்காசம். அவையளுக்கு ஒரு தமிழ் பேசும் அடிவருடிக்கூட்டம். உலக அரசியல் அரங்கில் இவர்களை தோல் உரித்து காட்டவேண்டும். எண்ட குடும்பமும் நண்பர்களுமாக ஒரு இருபது பேர் ஐந்து குழுவாக பிரிந்து கோவில்கள், மசூதிகள், சர்ச், குருதுவாரக்கள் என்று அவர்களது தொழுகையின் பின் ஒரு ஐந்து நிமிட உரைகள் நடத்துகிறோம். அவர்களுக்கும் நமது தமிழ் கலாசாரத்தின் படி பொங்கலும் இலவசமாக கொடுக்கிறோம். சிங்களவன் இப்போது இக்கட்ட நிலையில் இருக்கிறான். சிறி லங்கா என்றால் ஜெனோசைடு என்ற விடயத்தை உலகிற்கு எடுத்து கூறி ஆப்படிப்பது ஒவ்வொரு புத்தியுள்ள தமிழனும் செய்யவேண்டிய கடமை. தலைமை தலைமை என்று ஆட்டு மந்தைகளை போல் அலறாதீர்கள். ஒவ்வொரு திராவிடனும் ஒரு புலி. புலிக்கு ஏது தலைமை? அது தான் அந்த மாவீரனை அண்ணா என்றோ அல்லது தம்பி என்றோ அழைக்கிறோம்!!!!!!!!!!! தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்.

  • TAMIL TIGER wrote on 9 January, 2010, 10:24

    enakku kandippaga teriyum.velupillayai konrathu singala inavatha ranuvamthan.prabakaran enra oru maaviranai petru singala ranuvattin kangalil viral vittu atta karanamayirunthavar veluppilai.prabakran meendum varuvar.புலிகளின் pala thalabatigal கொள்ளப்பட்டாலும் இன்னும் pala thalapatigal irukkirarkal.amparai,vanni,mullaithivu kadugalil nutrukkanakkana poraligal தற்போது payirchi eduthu varugirargal.அவர்கள் payirchiyinpothu upayogikum kundukal,kanaraga ayuthangal,ilaguraga ayuthangal agiyavatrin sattam kathai thulaikkirathu enru singala ranuvam oru murai kuri iruntathu.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.