திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாதந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.

அவரது மறைவால் வாடும் அவரது துணைவியார், பிள்ளைகள், மருமக்கள், உற்றார் உறவினர் எல்லோருக்கும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் மக்களின் விடியலிற்காக இரவு பகலாக தொடர்ந்து போராடிய ஒரு உன்னத தேசிய தலைவரை ஈன்றெடுத்த வீரத்தந்தை அவருக்கு சிரம் தாழ்த்தி  பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரபாகரனின் பெற்றோர் என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மனித உரிமை அமைப்புகளோ உறவினர்களோ பார்வையிடக் கூட சிறிலங்கா அரசு அனுமதி வழங்கவில்லை. உரிய மருத்துவ வசதிகளின்றி இலங்கை இராணுவத்தின் தடுப்புக்காவலில் இறந்தார் என்ற செய்தி தமிழ் இளையோர்களையும் உலகமெங்கும் பரந்துவாழும் அனைத்து தமிழ் மக்களின் மனதையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.