அகவை 86ஆன திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்துக்கனடியத் தமிழர் பேரவை

 இராணுவத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த, அகவை 86ஆன திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்துக் கனடியத் தமிழர் குமுகம் வேதனையில் ஆழ்ந்துள்ளது.

திரு பிரபாகரன் அவர்களின் தந்தையாரான இவர் 39 ஆண்டுகள் அரச பணியாளராக இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றினார். இக்காலப் பகுதியில் பல பதவி உயர்வுகளைப் பெற்றவாக, மாவட்ட நில அலுவலராக 1982ஆம் ஆண்டிலே ஓய்வுபெற்றார்.

அவர் அவரது மனைவி சகிதம் 2009ஆம் ஆண்டு மே மாதம் முதல் இராணுத் தடுப்புக்காவலில் இருந்தார். இவரது மரணம் மற்றும் வயதானவராக இருந்தபோதும் இவரை வலுக்கட்டாயமாக இராணுத் தடுப்புக்காவலில் வைத்ததோடு மனிதாபிமானமற்ற முறையில் வைத்திய சேவைகளை நிராகரித்தமைக்கு இராசபக்சவின் தலைமையிலான சிறி லங்கா அரசே பொறுப்பு என கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் குற்றஞ்சாட்டினார்.

யுத்தம் முடிவடைந்ததெனக் கூறும், யுத்ததில் ஈடுபட்ட சிறிலங்கா அரசு, எதிரணியின் தலைவரின் பெற்றோரை சிறையிலடைத்ததும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதும் நாகரிகம் வளர்ச்சிடைந்த இன்றை உலகிலே எங்குமே காணமுடியாத ஒன்று. இவரது வயதையும் உடல் நிலையையும் கவனத்திற் கொள்கையில் இச் செயல் மிகவும் காட்மிராண்டித் தனமானது என்றால் மிகையாகாது. திருமதி வேலுப்பிள்ளை அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் இந்த வேதனையான இழப்பின் வேளையில் உலகளாவிய தமிழரோடு இணைந்து கனடியத் தமிழரும் தங்கள் இரங்லைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.