தந்தையே உங்கள் உறக்கம் தமிழனை விழிக்கச் செய்யும்

கதிர் பரிதிச் செல்வனை தமிழ்வாழ தந்த சூரியன் மேற்கில் சாய்ந்தது
எதிர் திiசையில் இக்கதிர் மகன் உதயம் வரை தமிழ் வானம் இருண்டது
சதிர் ஆடவெழும் பகை எரி;க்க எரிமலை தோற்றிய கோளவகம் ஓய்ந்தது
தேசிய விடுலை ஊற்றெடுத்துப் பெருகிய நதிமூலம் மண்ணில் புதைந்தது

கருணையில்லாதான் சிறைக் கொடுமை நிறை வாழ்வை பறித்துச் சென்றது
இவன் தந்தை என்நோற்றான் எனும் குறளின் பொருளின் உயிர் பிரிந்தது சென்றது
தன்மான நோயின் வலி பரவ ஈழம் சுழன்ற தேசக்காற்று சிறைக்குள் ஓய்ந்தது..
புலம் பெயர்ந்து வேகாது நிலம் காக்கும் மகனுக்கு பாசம் பொழிந்த மழை நின்றுது
தமிழுக்கு நிழலாக நின்ற தன்மானப் பெருவிருட்சம் விழுந்து போனது
 
வளநகர் துறந்து கானகம் புகுந்த மகனுடன் சென்ற மாபெரும் தந்தை
தமிழர் இதயபுரமேறி விண்ணில் உயர்ந்து விடி வெள்ளியான ஒளிவிளக்கு
நஞ்சுடன் கழுத்தைப் பிணைந்த பிள்ளையுடன் இணைந்து தமிழ் மண்ணிருந்து
அஞ்சாது வாழ்ந்து நங்சருந்தி தமிழ்காத்த நீலகண்டருக் கெல்லாம் பெரும்தந்தை 
  
சிந்தையில் தமிழை நிறுத்தி தானும் கொடும் துயரைச் சுமந்து வெந்துயர் ஊழிக் காற்றின் உவாதி நுகர்ந்து தமிழ் மூச்சில் கலந்த மறத் தமிழின்; மூத்த குடிமகன்
தந்தையே உன்னை அறியாத தமிழன் இவ்வுலகில் இல்லை
உன் பிரிவை எண்ணி அழாது இருந்தால் அவன் தமிழனுமில்லை
 
தன்னுடை உரிமைச் செல்வர் தமிழ் வழி சென்றது கண்டு
தங்கள் வாழ்வை அவ்வழி செலுத்தி உற்ற துணை நின்ற தந்தைக்கு
வந்தெதிரே தொழுது பாதம் தழுவி பெற்ற மகவோன்று கடன் செய்ய
மிக வீங்கு கொண்டு தலை விரித்தாடும் பேரினவாத தடை
 
ஐயா உங்கள் பிரிவுத் துயருறுத்த கரியவானும் கூடிக் கதறியழ
எந்த ஊரானாலும் உற்ற பிள்ளைகள் வந்து சூழ வல்வை மண்ணை தமிழ் பாதங்கள் மறைக்கும்..
தலைவனை தந்த உங்கள் பாதங்களை தமிழ்க் கண்ணீர் கடல் அலை வந்து தழுவும்
இமய மலையென உயரும் ஒரு பிடி மண் உங்கள் நிறை குழியுள் நாமிட்டால்
 
நீறுபூத்த நெருப்பை சுழன்றெழச் செய்கிறது உங்கள் நீறுடை நெற்றி..
ஆறாது பாயும் சோக வெள்ளம் கரைபுறண்டோடிட வந்தது உங்கள் செய்தி
வாழ்ந்தால் தமிழன் இவர் போல் வாழவேண்டும் என பாடம் சொல்லி நீங்கள் சரித்திரமானது எழும் தமிழுக்காக என்று எழுகின்றோம் தமிழர் இன்று
 
இறத்தலும் பிறத்தலும் யாவர்க்கும் இயற்கை ஆயினும், இறப்பினும் சிறப்பினைக் கொண்டவர் வாழ்வார் மானிடம் உள்ளவரை 
நரைத்தாலும் உணர்வற்று கைகால்கள் விறைத்தாலும் பேசமுடியாது வாயில் உமிழ் நீர் நுரைத்தாலும் இதயம் துடித்தவரை தமிழ் காத்த தந்தை செல்வாவின் தம்பியே நீங்கள்
 
சீரைச் சுற்றி தன்நலம் கொள்ளாது ஊரைச்சுற்றிய பகை விரட்ட தலைமை கொண்ட தம்பியை மார்பில் போட்டு மறப் பயன் வளர்த்த திருவே. சூரியரே திரு வெங்கடேச பெரியவரே
வீறு கொண்டெழுந்த வேங்கையின் தந்தையே உங்கள் நித்திய தூக்கம் தட்டி எழுப்புது இங்கு தூங்கும் தமிழனை..

- மணிவண்ணன்

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

One Comment on “தந்தையே உங்கள் உறக்கம் தமிழனை விழிக்கச் செய்யும்”

  • supramaniyam wrote on 10 January, 2010, 7:02

    இக் கவிதை இராமயணத்தில் ராமனை காட்டுக்கு அனுப்பிய தசரதனை நினைவுக்கு கொண்டுவருகிறது. தசரதன் ராமனை காட்டுக்கு அனுப்பிவிட்டு இறந்து போகின்றான். எங்கள் தேசிய தலைவரின் தந்தை தன் மகனுடன் வாழ்ந்து ஈழத்தின் வேதனைகளை தானும் சுமந்து சிறையின் சித்திரவதையில் மாண்டு போயுள்ளார்
    ஈழத்து காவிய நாயகரில் தேசிய தலைவரின் தந்தை மாதந்தையாக தமிழரின் மனதிலும் தமிழரின் வரலாற்றிலும் வாழ்வார் என்பது திண்ணம் . ஐயாவின் வரலாற்றை அவரது பிள்ளைகளில் யாரவது எழுத வேண்டும் . தேசிய தலைவர் அவர்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் இதை பணிவான வேண்டுகோலாக தமிழர் சார்பாக கேட்கின்றேன் யாருக்கு இப்பயன் கிட்டுமோ

    சுப்ரமணியம்

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.