சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளில் இதுவரையில் 1000 இக்கும் மேற்பட்டவர்கள் விடுதலை

இறுதிக்கட்டப் போரின்போதும், போர் முடிவடைந்ததன் பின்னரும் படையினரிடம் சரணடைந்துள்ள 12 ஆயிரம் பேரளவிலான விடுதலைப் புலிகளில் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்த 745 பேர் சனியன்று வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் முகாமில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விடுதலை குறித்து கருத்து தெரிவித்தபோதே பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் உட்பட, அவர்களுடன் இணைந்திருந்தவர்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஏற்கனவே 300க்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், செட்டிகுளம் மனிக்பாமில் வைத்து மேலும் 700க்கும் மேற்பட்டவர்கள் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளும் தொழிற்பயிற்சியுடன் கூடிய புனர்வாழ்வளிக்கப்பட்டு, தொழில் வாய்ப்புக்களுடன் படிப்படியாக விடுதலை செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் நீதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.