பிரித்தானியாவில் நடைபெற்ற வீரத்தந்தையின் வீரவணக்க நிகழ்வு
- இவ் விடயம் 11. 01. 2010, (வெள்ளி),தமிழீழ நேரம் 11:56க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர்
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10-01-2010 மாலை 2:30 மணியளவில் Croydon Lanc France மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஈகச்சுடரினை அன்னாரின் பெறாமகன் திரு. அருணாசலம் இரட்ணசபாபதி அவர்களும், அன்னாரது பேத்தியார் சிந்துஜாவும் இணைந்து ஏற்றினர்.
அதனைத்தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்கள் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள் வரிசையாக சென்று மலர்வணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்களும், வெண்புறா நிறுவனர் டொக்டர் மூர்த்தி அவர்களும், இன்னும் பல தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் உரைகளும், உணர்ச்சிக் கவிதைகளும் இடம்பெற்றன.
பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் கடும் குளிருக்கு மத்தியிலும் பெரும் திரளான மக்கள் சிறுவர்கள், வயோதிபர்கள் என அனைவருமாக வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் லண்டன் வெஸ்ட் ஈலிங் பகுதியிலுள்ள ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் வீரத்தந்தையின் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
ஈகைச்சுடர் ஏற்றலை தொடர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த இந்த நிகழ்வில் மக்களின் மலர்வணக்க நிகழ்வைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் சிலரின் உறையும், தொலைபேசியூடாக யாழிலிருந்து த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்களின் உரையும் இடம்பெற்றது.
இந்த வீரத்தந்தையின் வணக்க நிகழ்வில் உறை பனியுடன் கூடிய கடும் குளிரையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
One Comment on “பிரித்தானியாவில் நடைபெற்ற வீரத்தந்தையின் வீரவணக்க நிகழ்வு”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!
















மாவிரனைபெற்ற மறவன்
அவன் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்
வாழந்தால் இவனைப்போல் வாழவேண்டும்
லண்டன் மாநகரமே அஞ்சலிசெலுத்தியது இந்த மறவனை பெற்றவனுக்கு