கனடா கியூபெக் மாநிலத்தில் வீரத்தந்தையின் வீர அஞ்சலி நிகழ்வு

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்புக்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10.01.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் இல.5011 Buchan மொன்றியலில் அமைந்துள்ள EVEAGREEN மண்டபத்தில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகியது.

மாதந்தையின் திருவுருவப்படத்துக்கான ஈகைச்சுடரேற்றலைத் தொடர்ந்து மலர்வணக்கமும் அகவணக்கமும் இடம்பெற்றது.

தொடர்ந்து ஊர்ச் சங்கங்கள், பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள், ஆலயங்கள் மற்றும் அமைப்புகள் சார்பாக மலர்வளையங்கள் எடுத்துவரப்பட்டு தந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகளும், இரங்கல் கவிதைகளும், பாடல்களும் இடம்பெற்றன.

தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதிமொழியுடன் இரவு 9:00 மணியளவில் மாதந்தை அமரர் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கான வீர அஞ்சலி நிகழ்வு நிறைவுபெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவிலான மொன்றியல் வாழ் உறவுகளும் கோண்வோல் பிரதேசத்தில் வசிக்கும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.