வலிகாமம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற ஈபிடிபியினர் மக்களால் விரட்டியடிப்பு!
-
இவ் விடயம் 12. 01. 2010, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 3:48க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
யாழ் வலிகாமம் சுண்ணாகம் மற்றும் மல்லாகம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்காக சென்ற ஈபிடிபியினர் பலர் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்துள்ளது.
மகிந்தவின் யாழ் வரவை ஒட்டி மக்களை திரட்டும் முகமாக வலிகாமத்தில் சில இடங்களில் கூடிய ஈபிடிபியினர் மக்களை யாழ் பொது விளையாட்டரங்குக்கு வரும் படியும் பிரச்சினைக்கு தீர்வுகளை மகிந்த மூலம் தாம் பெற்ற தருகின்றோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது சில பெற்றோர் தமது காணமல் போன பிள்ளைகள் பற்றி கேள்வி எழுப்பவே அதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் அது படையிகர் சம்பந்தப்பட்ட விடயம் என்றும் நழுவ முற்பட்ட ஈபிடிபியினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றவே மக்கள் கூடி எங்கள் பிள்ளைகளை கடத்தி கொன்றதும் நீங்கள் சுட்டுக் கொன்றதும் நீங்கள் எனத் திட்டித் தீர்ததுடன் கையில் கிடைத்தவற்றைகொண்டு தாக்கமுற்பட்டதுடன் அவ்விடத்தை விட்டு அகலும் படி ஈபிடிபியினரை எச்சரித்து கூக்குரல் எழுப்பவே ஈபிடிபியினர் படையினரையும் உதவிக்கு அழைக்க முடியாமல் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
One Comment on “வலிகாமம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற ஈபிடிபியினர் மக்களால் விரட்டியடிப்பு!”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!





எதிர்ப்பினை அனைத்து தரப்பினரும் அனைத்து வழிகளிலும்
விடாது
காண்பிக்க வேண்டும்.. அதுவும் உன்னத போராட்டமே .
கொண்ட கொள்கையை மறவோம் தமிழர் யாரென்று உலகுக்கு உணர்த்துவோம் .தமிழ் ஈழம் நம் வாழ் நாளிலேயே பெறுவோம்..