பிரான்சில் சுதந்திரதாகம் ஏழுச்சி நிகழ்வும் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வும்

ஈழத்தமிழினமே அன்னை மண் உலகம் இரண்டிலும் இனிநாங்கள் முன்னைவிட ஆயிரம் மூச்சோடு தலைநிமிர்வோம் ஈழ விடுதலைப்போர் தொடுப்போம் தொடர்வோம் சுதந்திரதாகம் என்று பிரான்சு பாரிசு புறநகர் பகுதியில் அமைந்துள்ள  LSC  மண்டபத்தில் 10.01.2010 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 16.00 தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில்அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வும்  சுதந்திரதாகம் நிகழ்வும் நடைபெற்றது.

இந்திய இராணுவத்தினரின் முற்றுகைப்போரில் வீரச்சவைததழுவிக்கொண்ட மாவீரன் ரூபன் அவர்களின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க மாவீரர்களுக்கும், விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்காகவும், பொது மக்கள், நாட்டுப்பற்றாளர்கள், சாவடைந்தமக்கள், அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மலர்வணக்கமும், வணக்கவுரைகளும் இடம்பெற்றன. தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ்ப்பெண்கள் அமைப்பு, தமிழர் கல்விமேம்பாட்டு பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவையினரும் சிறப்புரைகளை வழங்கியிருந்தனர்.

இவர்களின் உரையில் தமிழீழத்தின் விடிவெள்ளி, தமிழினத்தின் காப்போன், தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் என்றும் மாறாத அழியாத ஒளியாய் திகழும் தமிழீழ தேசியத்தலைவர்  இப்பூவுலகிற்கு தந்து, நல்லதொரு பாதையில் வழிநடத்தி  வளர்த்தெடுத்த உத்தமர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயா அவர்கள் என்றும் கடந்த கால விடுதலைப்போராட்டத்திலே பல சிங்கள இராணுவ வீரர்கள்  தமிழீழ தேசிய இராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகளால் போர் முனையில் கைது செய்யப்பட்டதும் ஏன் முள்ளிவாய்க்காலில் போர் உச்சக்கட்டமான நிலையில் இருந்த போது கூட சில ஆண்டுகள் விடுதலைப்புலிகளின் கைதிகளாக இருந்த  சிங்கள் இராணுவத்தினரை விடுதலை செய்யப்பட்டதும் அப்படிப்பட்ட மனிதாபிமானம் கொண்ட எங்கள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தந்தை வயது முதிர்ந்த நிலையில் அடிப்படை மருத்துவ வசதிகூட செய்து கொடுக்கப்படாத கவனிக்கப்படாத நிலையில் பரிதாபிகரமாக இறந்துள்ளார்.

இப்படிப்பட்ட மனிதநேயமற்ற சிங்கள அரசிடமும் அதன் மக்களிடம் எதைத்தான் எதிர்பார்க்க முடியும். எனவே எமது இழந்த உரிமை நாம் தான் போராடிப்பெற்றிட வேண்டும் அந்த வழி எது என்பதைதான் நாம் இனி தீர்மானிக்க வேண்டியவர்களாக உள்ளோம் என்றும் கூறியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து எழுச்சி அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. விடுதலையை நேசித்தபடி பிரான்சின் நாடக, நடன, கலைஞர்கள் சுமார் 150 ற்கும் மேற்பட்டோர் இணைந்து தொடர்ச்சியாக இடைவெளியில்லாது, தொய்வில்லாது 2மணி 35நிமிடங்கள் வரை பேரெழுர்ச்சியோடு நடைபெற்றது.

நீண்ட பெரும் வரலாற்றுத்தொன்மை கொண்ட தமிழர் வரலாற்றில் தொடங்கி அந்நியர் ஆட்சிக்காலம், சிங்கள ஆட்சியாளர்களின் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகள் அதைக்கண்டு வெகுண்டெழுந்த தமிழ்மக்கள் போராடிய காலம் என நகர்ந்து பின் காலத்தின் கொடையாய் வந்த எம் தலைவன், காலம் தந்த கரிகாலன் சேனைகொண்டு படைநடாத்திய ஓர்மம், படைத்த சாதனைகள் யாவும் வெண்திரையில் விவரணமாக மேடையில் சிறப்பாக அமைக்கப்பட்ட வெண்திரையில் ஒளிகசிய அதற்கேற்ற வகையில் நடனக்கலைஞர்கள், மாணவிகள் தமது நடனங்களை வழங்கினர்.

இறுதிப்போரான தமிழ்மக்கள் முள்சுமந்த முள்ளிவாய்க்கால் அநர்த்தங்கள்  மனிதநாகரீகம் வெட்கித்தலைகுனியும் தமிழினப்படுகொலைகள் காட்சியாகவும், அதன் சூத்திரதாரிகள் அதற்கு துணைகொடுத்த ஏனைய தேசங்கள் அரங்கில் இருந்து அதனை அடையாளப்படுத்தும் கொடிகளோடும் நாடகக்கலைஞர்களால்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முடிவில் தமிழீழ தேசியக் கொடி எங்கள் உயிர் நாடி எங்கள் இலக்கான தமிழீழ தேசத்தையடைய அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளவும், எமது மக்கள் சுதந்திரதாகத்தை தமது மூச்சாக உள்வாங்கி சுவாசிக்க வேண்டும் என்று உணர்த்தினர். இந்த அரங்க நிகழ்வானது மக்களை வியப்பிலும் உணர்ச்சிப்பிரவாகத்தில் வைத்திருந்தது.

எழுச்சி நிகழ்வின் அங்கமாகவிருந்த சிறப்புரைகளில்- நாம் தொடர்ந்து ஒற்றுமையுடனும், உணர்வுடனும் தமிழீழ விடுதலைக்கான பங்காளர்களாகவும், மாவீரர்கள் சுமந்த கனவை நெஞ்சிலேந்தி விடுதலை கிடைக்கும் வரை போராட வேண்டும், அதற்கேற்ற வகையில் இளைய சமுதாயம் தமக்கான கல்வியினைத்தேர்ந்தெடுத்து கற்பதோடு, பொருளாதாரத்தில் ஈழத்தமிழினம் பெரும் உயர்வடைந்து எதையும் சாதிக்கும் வல்லமை பெறவேண்டும் எனவும் புலம்பெயர் மக்களிடம் வழங்கப்பட்டுள்ள விடுதலைத்தீயை அணையவிடாமல் காப்பதும் ஓவ்வொரு ஈழத்தமிழர்களின் தலையாய கடமை எனவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க உழைத்து வரும் நாடுகடந்த அரசாங்கத்தின் செய்ற்பாடுகளுக்கு வலுச்சேர்த்து எமது விடுதலையை வென்றெடுக்க ஆதரவு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து விழ விழ எழுவோம் என்ற பாடலுக்கு சபையிலிருந்த இளையோர்கள் மேடையேறி ஏனைய கலைஞர்களுடன் இணைந்து கொண்டதுடன் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எனும் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

வரலாற்று பதிவுகள் அடங்கிய பெரும் ஆவணம் எனவும், மக்களின் அழுகை, மாவீரர்களின் தியாகம், தங்கத்தளபதிகளின் ஓர்மம், மாமணித்தலைவனின் மகத்துவம் என பெரும் பொதிவை உள்ளடக்கிய சுதந்திர தாகம் எழுச்சி நிகழ்வு பெரும் விழிப்பையும், உணர்வையும் ஏற்படுத்தியது. இவ்வாறான ஒரு கலைபடைப்பை வழங்கி மக்களின் பாராட்டுதல்களை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பும், பிரான்சு கலைபண்பாட்டுக்கழகத்தினரும் பெற்றிருந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.