யாழில் சக்தி தொலைகாட்சி அலை வரிசையினை அரசு நிறுத்தியதனை எதிர்த்து ஊர்வலம்

யாழ் குடா நாட்டில் சக்தி தொலைகாட்சி சேவையின் அலைவரிசயை அரசாங்கம் நிறுத்தியதனை கண்டித்து இன்று யாழ்ப்பானத்தில் ஓர் அமைதி ஊர்வலம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யாழ் நீதி மன்றம் முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் வாயில் கறுப்பு துணிகளை கட்டி மெளன ஊர்வலம் ஒன்றினை நடாத்தினர்.

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சக்தி ஊடகம் பல சேவைகளை வழங்கியதாகவும் ஆனால் தேர்தலினை மையமாக வைத்து அரசாங்கம்  திட்டமிட்டு சக்தி தொலைகாட்சி அலைவரிசையினை நிறுத்தி அதே அலை வரிசையில் வடக்கின் வசந்தம் நிகழ்ச்சியினை ஒளிபரப்புவதாகவும்.

இதனை தாம் கண்டிப்பதுடன் மீண்டும் அந்த அலைவரிசையினை அனுமதிக்க வேண்டும் என்றே இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.