சுங்கத்திணைக்கள பணிப்பாளரும் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
- இவ் விடயம் 13. 01. 2010, (வியாழன்),தமிழீழ நேரம் 5:43க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
எதிர்வரும் தேர்தலில் தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வருவதால் நாட்டை விட்டு தப்பியோடும் நடவடிக்கைகளை சுங்கத்திணைக்கள பணிப்பாளரும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்சாவுக்கான ஆதரவுகள் குறைந்து வருவதால் அவரை ஆதரித்து வரும் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் சரத் ஜெயதிலகாவும் நாட்டை விட்டு தப்பியோட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் சிறீலங்காவுக்கான இரட்டை குடியுரிமைகளை கொண்டுள்ள அவர் தற்போது தனது மகளை அமெரிக்காவுக்கு அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அடுத்த வாரமளவில் அவரின் மகள் அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார்.
அதன் பின்னர் அவர் தப்பியோட உள்ளதாகவும், சிறிலங்காவில் உள்ள தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்கும் அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
2 Comments on “சுங்கத்திணைக்கள பணிப்பாளரும் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!



சினகலவனும் எப்படியோ ஏழாயிரம் மில்லியன் டாலர்களை போறவன் வாரவனட்ட எல்லாம் பிச்சை எடுத்து தமிழனை கொண்டவை. இப்ப கப்பல் தாளப்போது எண்டவுடன் பெருச்சாளிகள் எல்லாம் தப்பி ஓடுதுகள். இதுகளுக்கு மேல தமிழ் ஜெனோசைட் நடத்தியதுக்காக வழக்கு போட்டு அமெரிக்காவிலும் இருக்க விடக்கூடாது. தமிழர் எங்கட கை வரிசைய காட்டோணும்.
first ஒஉர் ஆல் tamils joint டு டேக் அச்டின் அகைன்ச்ட் டு புள்ளடி இந்திய இந்திய இந்திய first எனேமி டு ஆல் ஸ்ரீலங்கன் தமிழ்ச வி ஹவே டு டேக் கேஸ் அகின்ச்ட் இன் இன்டர்நேஷனல் கோர்ட் டு இந்திய i